Tuesday, 22 October 2013

Tagged Under:

கன்னியாகுமரி மாவட்டத்தின் வரலாறு!

By: Unknown On: 07:51
  • Share The Gag


  • தமிழகத்திற்கு தெற்கு எல்லையாகத் திகழும் நகரம். இயற்கை அழகுக்கு பெயர் போன இம்மாவட்டத்தில் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் முந்தைய பல வரலாற்றுச் சின்னங்களும் அமைந்திருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு இது ஒரு சொர்க்கமாக திகழ்கிறது. இம்மாவட்டத்தின் மேற்கு எல்லையாக கேரள மாநிலமும் வடக்கு மற்றும் கிழக்கு எல்லைகளாக தமிழகத்தின் நெல்லை மாவட்டமும் திகழ்கிறன. அரபிக்கடல், வங்காளவிரிகுடா, இந்தியப் பெருங்கடல் என முக்கடலும் சங்கமிக்கும் இடம் கன்னியாகுமரி. இங்கு காணக் கிடைக்கும் சூரிய உதயமும், அஸ்தமனமும் வண்ணத்திருவிழா. வானம் வாரியிறைக்கும் வர்ண ஜாலம் அது. பல வண்ண மணல் நிரம்பிய குமரி கடற்கரை காணக் காண இன்பமே.


    கன்னியாகுமரி என்ற பெயர் இப்பகுதியில் புகழ்பெற்ற கன்னியாகுமரி அம்மன் என்னும் தேவதையை மையப்படுத்தும் தல புராணத்திலிருந்து இம்மாவட்டத்துக்கு கிடைத்திருக்கிறது. இது பார்வதி தேவி தன்னுடைய ஒரு அவதாரத்தில் 'குமரிப் பகவதி' என்னும் பெயருடன் சிவனை சேரும் பொருட்டு இந்நிலப் பகுதியின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு பாறையில் தவம் செய்ததாக கூறுகிறது.

    சங்க காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும் பகுதிகளை ஆய் என்னும் சிற்றரசனே ஆண்டதாக கூறப்படுகிறது. இப்பகுதியில் பொதுவாக அழைக்கப்படும் 'நாஞ்சில் நாடு', 'இடை நாடு' ஆகிய பகுதிகளை இம்மாவட்டம் உள்ளடக்குகிறது. இப்பகுதியில் நிரம்ப வயல்கள் இருந்ததால், நிலத்தை உழ பயன்படும் நாஞ்சிலிலிருந்து இந்நிலப்பரப்புக்கு இப்பெயர் வந்தது என்பது பெயரியல் நிபுணர்கள் துணிபு. தற்போது அகத்தீஸ்வரம் மற்றும் தோவாளை வட்டங்களாக இருக்கும் நாஞ்சில் நாடு, பத்தாம் நூற்றாண்டின் முதற்பகுதி வரை பாண்டியர்களின் ஆட்சிப்பகுதியாக இருந்து பின் சேரர்கள் வசம் வந்ததாகத் தெரிகிறது.


    சுற்றுலாத் தலங்கள்


    நாகர்கோவில்
    சுசீந்திரம்
    வட்டக் கோட்டை
    பத்மநாபபுரம் அரண்மனை
    சிதறால் சமண நினைவு சின்னங்கள்
    மாத்தூர் தொட்டிப் பாலம்
    திருநந்திக்கரை குகைக் கோவில்
    திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில்
    உதயகிரிக் கோட்டை
    உலக்கை அருவி
    பேச்சிப்பாறை அணைக்கட்டு
    பெருஞ்சாணி அணைக்கட்டு
    திற்பரப்பு நீர்வீழ்ச்சி
    முட்டம் கடற்கரை
    தேங்காய்ப்பட்டணம் கடற்கரை
    சங்குத்துறை கடற்கரை
    ஆலஞ்சி கடற்கரை

    0 comments:

    Post a Comment