Jolla எனும் நிறுவனமானது தனது முதலாம தலைமுறை ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.5 அங்குல அளவு மற்றும் 960 x 540 Pixel Resolution உடைய HD தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது 1.4 GHz வேகத்தில் செயலாற்றவல்ல Snapdragon Processor, பிரதான நினைவகமாக 1 GB RAM ஆகியவற்றினை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது. 141 கிராம் நிறையுடைய இப்புதிய கைப்பேசியில் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய துணையான கமெரா போன்றனவும் காணப்படுகின்றன. இவற்றில் காணப்படும் 2100 mAH மின்கலமானது 3G வலையமைப்பு தொடர்பாடலின்போது தொடர்ச்சியாக 8 மணித்தியாலங்களுக்கு மின்னை வழங்கக்கூடியவாறு இருக்கின்றது. மேலும் இதன் விலையானது 400 யூரோக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
Thursday, 3 October 2013
Tagged Under: மென்பொருள்-புதுசு!, மொபைல்-புதுதகவல்!
Jolla அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி!
By:
Unknown
On: 08:07
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment