Saturday, 9 November 2013

Tagged Under:

பிரைன் லாரா இந்தியா வருகை...! கிரிக்கெட் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு...!

By: Unknown On: 20:47
  • Share The Gag


  •             மும்பையில், வரும் 14ம் தேதி தொடங்கும் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டல்கர் பங்கேற்கும் 200வது போட்டி, நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரின் இறுதியாட்டத்தை காண்பதற்காக, வெஸ்ட் இண்டிஸ் அணியின் முன்னாள் கேப்டன் பிரைன் லாரா இந்தியா வந்துள்ளார்.

               கிரிக்கெட்டின் கடவுள் என்று புகழப்படும் சச்சின் டெண்டல்கர், சர்வதேச ஒருநாள் போட்டி மற்றும் டி 20 போட்டிகளில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்டார். இதனைத்தொடர்ந்து, தனது 200-வது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக டெண்டல்கர் ஏற்கெனவே அறிவித்து இருந்தார்.
       
               அதன்படி, மஹாராட்டிராவில் உள்ள மும்பையில் வரும் 14ம் தேதி தொடங்கும் வெஸ்ட் இண்டிஸ்ஸிற்கான இரண்டாவது இன்னிங்ஸ், சச்சின் டெண்டல்கர் பங்கேற்கும் 200வது போட்டி என்பதால், கிரிக்கெட் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சொந்த மண்ணில் சச்சின் பங்கேற்கும் கடைசி போட்டி என்பதால், 30 ஆயிரம் இருக்கைகள் கொண்ட வாங்டே மைதானம், முழுமையாக நிரம்பும் வகையில், டிக்கெட் விற்பனை வெகு வேகமாக விற்பனையாகி வருகின்றன.

                இந்நிலையில், கிரிக்கெட் வரலாற்றில் இடம்பெறவுள்ள சச்சினின் இறுதியாட்டத்தை காணும் ஆர்வத்துடன், வெஸ்ட் இண்டிஸ் அணியின் முன்னாள் கேப்டன் பிரைன் லாராவும், விமானம் மூலம் இன்று மும்பை வந்துள்ளார். விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சச்சின் ஆட்டத்தை காண ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார்.

    0 comments:

    Post a Comment