Thursday, 7 November 2013

Tagged Under: ,

வெங்காயத்தை இப்படியும் பயன்படுத்தலாம்.

By: Unknown On: 08:05
  • Share The Gag
  • சமையலுக்கு பயன்படும் வெங்காயம், சாப்பிட மட்டும் தான் பயன்படுகிறது என்று தான் தெரியும். ஆனால் அந்த வெங்காயம் வேறு எதற்கெல்லாம் பயன்படுகிறதென்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஆம், அந்த வெங்காயம் ருசிக்கு மட்டுமின்றி சிலவற்றை சுத்தம் செய்யவும் பயன்படுகிறது. அதிலும் சமையலறையில் இருக்கும் சிலவற்றிற்கே பயன்படுகிறது. ஆகவே மறுமுறை சமைக்கும் போது, தேவையில்லாமல் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை தூக்கிப் போடாமல், வேறு சில செயல்களுக்கும் பயன்படுத்துங்கள். இப்போது அந்த வெங்காயம் வேறு எதற்கெல்லாம் பயன்படுகிறதென்று பார்ப்போம்

    மெட்டல் பொருட்கள்:

    சமைக்கப் பயன்படும் வெங்காயம் சாப்பிடமட்டுமல்லாமல், மெட்டல் பொருட்களில் படியும் கறைகள், துரு போன்றவற்றை நீக்கப் பயன்படுகிறது. ஆகவே இனிமேல் ஏதாவது மெட்டல் பொருட்களில் துரு அல்லது கறைகள் போகாமல் இருந்தால், அப்போது சிறு துண்டு வெங்காயத்தை எடுத்து அதன்மீது தேய்த்தால், போய்விடும். இதனால் மெட்டல் பொருட்கள் அழகாக மின்னும்.

    வாணலி:

    பொதுவாக சமைக்கும் போது எண்ணெய் எதற்கு பயன்படுத்துகிறோம் என்று தெரியுமா? வாணலியில் ஒட்டாமல் இருக்க வேண்டும் என்று தானே பயன்படுத்துகிறோம். ஆனால், இப்போது அதே பயன்பாட்டிற்கு தான் வெங்காயமும் பயன்படுகிறது. அதாவது வாணலியை அடுப்பில் வைக்கும் முன் சிறிது வெங்காயத்தை எடுத்து தேய்த்து, பின் சமைத்தால், அடிபிடிக்காமல் இருக்கும்.

    அடிப்பிடித்தல்:

    வெங்காயம் வாணலியில் உள்ள கறைகளை நீக்கவும் பயன்படுகிறது. அதாவது சமைக்கும் போது ஏதேனுமூ அடி பிடித்துவிட்டால், அவை நீண்ட நாட்கள் போகாமல் இருக்கும், அந்த கறை நீங்குவதற்கு, சிறிது வெங்காயத்துண்டுகளை எடுத்து, அந்த வாணலியில் தேய்த்து, 5-10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், கறைகள் நீங்கிவிடும்.

    கிரில் மிசின்:

    வீட்டில் பயன்படும் சமையல் பொருட்களில் ஒன்றான கிரில் மிசின், தீயில் நீண்ட நேரம் இருப்பதால், அது கருமை நிறத்தில் இருக்கும் வாங்கும் போது தான் புதிதாக பளிச்சென்று இருப்பதை பார்த்திருப்போம். ஆனால், அதை இப்போது புதிது போல் மின்னச் செய்ய, அதன் இரு முனைகளிலும் வெங்காயத் துண்டை வைத்து, நன்கு தேய்க்க வேண்டும். இதனால் அந்த கிரில் மிசின் அழகாகக் காணப்படும்.

    நாற்றம்:

    வீட்டில் இருக்கும் போது திடீரென்று எதாவது ஒரு மூலையிலிருந்து அழுகிய நாற்றம் வரும். அப்போது எவ்வளவு நேரம் தான் மூக்கை மூட முடியும். ஆகவே அப்போது சிறிது வெங்காயத்தை நறுக்கி, நாற்றம் அடிக்கும் இடத்தில் வைத்துவிட்டால், அந்த அழுகிய நாற்றம் போய்விடும்.

    0 comments:

    Post a Comment