Friday, 15 November 2013

Tagged Under: , , , ,

மாணவர்களுக்கு நிதி அறிவு தேர்வு!

By: Unknown On: 21:29
  • Share The Gag
  • எட்டாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நிதி தொடர்பான அறிவை சோதிக்கும் வகையில் தேசிய அளவிலான தேர்வு நடக்க உள்ளது. தேசிய நிதிக் கல்வி மையம் நடத்தும் இந்த தேர்வுகள் ஜனவரி 12ம் தேதி நடைபெறவுள்ளது.

    75 கேள்விகள் கொண்ட இத்தேர்வு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் நடத்தப்படும். தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

    இத் தேர்வில் பங்கேற்க கட்டணம் எதுவும் இல்லை. தேர்வில் பங்கேற்க விரும்புவோர் அவரவர் பயிலும் பள்ளிகள் வாயிலாகவே விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.


    பங்கேற்க விரும்புபவர்கள்  www.nism.ac.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.


    பதிவு செய்ய நவம்பர் 29-ம் கடைசி நாள். ஜனவரி 23ம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்.

    0 comments:

    Post a Comment