Thursday, 21 November 2013

Tagged Under: ,

ஏ.வி.எம்மின் புது முடிவு!

By: Unknown On: 20:52
  • Share The Gag

  • தமிழ் சினிமாவின் முக்கியத் தயாரிப்பு நிறுவனங்களில்ஏவிஎம் ஸ்டூடியோவைத் தவிர்க்க முடியாதது. தற்போது அந்த நிறுவனம் ஒரு புதிய முயற்சியில் இறங்கத் திட்டமிட்டுள்ளது.

    குறும்படங்களின் ஏகோபித்த வரவேற்பால் சின்னச் சின்ன படங்களைத் தயாரிக்க முன்வந்துள்ளது.

    ஒரு மணி நேரம் மட்டும் ஓடும் படங்களைத் தயாரித்து இணையதளங்களில் வெளியிடலாம் என்று ஏ.வி.எம் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

    தங்களின் முதல் இணையத் தயாரிப்புக்கு ஏவிஎம் நிறுவனம் வைத்துள்ள பெயர் “இதுவும் கடந்து போகும்” .

    55 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படத்தில் சிவாஜியின் பேரனான சிவாஜி தேவ், ஷில்பா பட், ரவி ராகவேந்தர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை ஸ்ரீஹரி பிரபாகர் எழுத, அவருடன் இணைந்து இந்த படத்தை அனில் கிருஷ்ணன் இயக்கியுள்ளார்.

    'இதுவும் கடந்து போகும்' படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.

    ''திரைப்படம், சின்னத்திரைக்கு இணையான ஊடகமாக இணையமும் வளர்ந்து வருகிறது. அதனை உணர்ந்து, அந்த வளர்ச்சியில் பங்கு பெற ஏ.வி.எம்அதற்கான படங்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது.

    அதற்கான முதற்படி தான், இதுவும் கடந்து போகும் என்ற ஒரு மணி நேரப் படம்'' என்று ஏ.வி.எம் தெரிவித்துள்ளது.

    0 comments:

    Post a Comment