Monday, 4 November 2013

Tagged Under: ,

ஷங்கர் விளக்கம் - 'ஐ' படத்துக்கு எமி ஜாக்சனை தேர்ந்தெடுத்தது ஏன்?

By: Unknown On: 08:48
  • Share The Gag
  • ஷங்கர் டைரக்ட் செய்து வரும் பிரமாண்ட படம் 'ஐ'. விக்ரம்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிசந்திரன் 150 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கிறார். நல்ல அழகான இந்திய நடிகைகள் தமிழ் நடிகைகள் இருக்கும்போது வெளிநாட்டு வெள்ளைக்கார பெண்ணான எமி ஜாக்சனை ஹீரோயினாக்கினார் ஷங்கர். அது ஏன் என்பதற்கு இப்போது விளக்கம் அளித்துள்ளார்.

    அவர் கூறியிருப்பதாவது: 'ஐ' என்றாலே அழகை குறிக்கும் சொல். படத்திலும் அழகிற்கு பெரிய முக்கியத்துவம் இருக்கிறது. அழகை பற்றித்தான் படம் பேசுகிறது. அதற்கு அழகான ஹீரோயின் தேவைப்பட்டார். நூற்றுக்கணக்கான இந்திய பெண்களை ஆடிசன் பண்ணிப் பார்த்தோம். எல்லோருமே அழகுதான், ஆனால் என் மனசுக்குள் இருந்த அந்த அழகு தேவதை உருவத்துக்கு யாரும் செட்டாகவில்லை.

    அப்புறம்தான் எமி சாய்சுக்கு வந்தாங்க. பிரிட்டீஷ் பொண்ணு சரியா வரமாட்டாங்கன்னுதான் தோணிச்சு. பி.சி.ஸ்ரீராம்தான் ஆடிசன் பண்ணி பார்த்துடலாமுன்னு சொன்னார். அதன்படி அவரை அழைச்சிட்டு வந்து ஆடிசன் பண்ணினோம். ஸ்கிரீன்ல தெரிஞ்சது எமி இல்லை. என் மனசுக்குள்ள இருந்த கேரக்டர். அவரையே நடிக்க வச்சோம்.

    நடிப்பிலும் நான் எதிர்பார்த்ததை விட ஸ்கோர் பண்ணினாங்க. வசனத்தை தமிங்கிலீசில் எழுதிக் கொடுத்துடுவோம். ராத்திர பூரா உட்கார்ந்து மனப்பாடம் பண்ணிட்டு மறுநாள் காலையில எக்ஸ்பிரசனோடு பேசி அசத்திடுவாங்க. படம் பார்க்கும்போது என் சாய்ஸ் சரிதான்னு உங்களுக்கும் தெரியும் என்கிறார் ஷங்கர்.

    0 comments:

    Post a Comment