Saturday, 28 December 2013

Tagged Under: , ,

4000 தடவைகளுக்கும் மேலாக ஒலிபரப்பான பூமி என்ன சுத்துதே பாடல்

By: Unknown On: 22:45
  • Share The Gag



  • கொலவெறி புகழ் அனிருத் இசையில் இந்த ஆண்டு வெளியான திரைப்படம் எதிர்நீச்சல். இப்படத்தின் “பூமி என்ன சுத்துதே” பாடல் இவ்வாண்டில்
    அதிகம் ஒலிபரப்பப்பட்ட பாடலாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் கடந்த மே மாதம் வெளியான திரைப்படம் எதிர்நீச்சல்.
    சிவகார்த்திகேயன் மற்றும் பிரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் அனைத்துப் பாடல்களுமே மாபெரும் ஹிட்டாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    மேலும் மிகமுக்கியச் செய்தியாக “ பூமி என்ன சுத்துதே” பாடலை நடிகர் தனுஷ் எழுதியிருந்தார். அனிருத் இப்பாடலைப் பாடியிருந்தார் என்பதே. இவர்களின் கூட்டணியில்தான் கடந்த வருடம் வெளியான “ ஒய் திஸ் கொலவெறி” பாடலும் உலகப் புகழ் பெற்றது நினைவிருக்கலாம்.

    சென்னையில் உள்ள 7 பண்பலை வானொலி நிலையங்கள் மற்றும் கோவையில் உள்ள 4 பண்பலை வானொலி நிலையங்கள் ஆகியவற்றில் மொத்தமாக இப்பாடல் சுமார் 4028 முறைகள் ஒலிபரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    வருகிற 2014 ஆம் ஆண்டும் அனிருத்திற்குச் சிறப்பான ஆண்டாக அமைய பிளஸ் மீடியா வாழ்த்துகிறது

    0 comments:

    Post a Comment