Saturday, 21 December 2013

Tagged Under: ,

‘இவன் வேற மாதிரி’ நல்ல பொழுதுபோக்கு படம்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

By: Unknown On: 10:00
  • Share The Gag



  • தமிழில் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தை இயக்கிய சரவணன், தற்போது விக்ரம் பிரபுவை வைத்து இயக்கியுள்ள படம் ‘இவன் வேற மாதிரி’. இப்படத்தில் நாயகியாக சுரபி நடித்துள்ளார். கணேஷ் வெங்கட்ராம், வம்சி கிருஷ்ணன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். சத்யா இசையமைத்துள்ளார்.

    இப்படத்தை காதல் மற்றும் ஆக்‌ஷன் கலந்த கலவையாக சரவணன் இயக்கியுள்ளார். இப்படம் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

    இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தை பார்த்தார். பின்னர் அவர் இப்படம் குறித்து கூறியதாவது:-

    ‘இவன் வேற மாதிரி’ படத்தை பார்த்தேன். ஒரு கிளாஸான ஆக்‌ஷன் படம். இது வரைக்கும் எந்தப் படத்திலும் பார்த்திராத படத்தின் உச்சக்கட்ட காட்சிகள் பிரமிக்க வைக்கிறது. இது நல்ல பொழுதுபோக்கு படம். இந்தப்படம் வெற்றி பெற்ற என் வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    0 comments:

    Post a Comment