Sunday, 1 December 2013

Tagged Under: , ,

எது இன்பம்...?

By: Unknown On: 20:00
  • Share The Gag

  • நம்முடைய தேவைகளே நமது சொர்க்கங்களை உருவாக்குகின்றன. நம் தேவைகளின் மாறுதலுக்கேற்ப,நமது சொர்க்கங்களும் மாறுகின்றன.


    புலன்களின் மகிழ்ச்சி வாழ்க்கையின் எல்லா விசயங்களிலும் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்கள் நிர்மாணிக்கும் சொர்க்கத்தை போன்றதொரு சொர்க்கம் அமைந்தால் நாம் முன்னேறவே இயலாது!


    நாம் அடையக்கூடியது இவ்வளவுதானா?


    சிறிது காலம் அழுகின்றோம்;


    சிறிது காலம் சிரிக்கின்றோம்;


    கடைசியில் எல்லாம் இழந்து இறந்து போகின்றோம்!


    உலக வாழ்க்கையின் இன்பங்களை துரத்திக்கொண்டே போகின்றோம் எது உண்மையான இன்பம் என்று தெரியாமலே....?


    இன்பத்தை விட்டுவிடச்சொல்லி நம்மை தத்துவங்கள் ஒருபோதும் வற்புறுத்துவதில்லை.மாறாக எது உண்மையான இன்பம் என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுங்கள் என்றே கூறுகிறது.

    0 comments:

    Post a Comment