Friday, 13 December 2013

Tagged Under: , , , ,

பேஸ்புக்கில் புதிதாக “Unfollow” பட்டன்!

By: Unknown On: 06:15
  • Share The Gag




  • குறிப்பிட்ட நண்பர்களிடமிருந்து வரும் இடுகைகளையும், தகவல்களையும் தடை செய்வதற்கு ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த “Hide All” என்ற பொத்தானுக்குப் பதிலாக இன்னும் வசதியாக “Unfollow” என்ற பொத்தானை அறிமுகப்படுத்தியுள்ளது பேஸ்புக் வலைத்தளம்.


    இந்த “Unfollow” பொத்தானை பயன்படுத்துவதன் மூலம், சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியாமலேயே அவர்களது இடுகைகள் மற்றும் தகவல்களை தடை செய்யலாம்.


    இதன் மூலம், எப்போதும் போல் அவர்களுடன் நட்பு வட்டத்தில் இருக்கலாம். அதேநேரத்தில் அவர்களின் இடுகைகள் உங்களது “News Feed” பக்கத்தில் வராத வண்ணம் தடுத்து வைக்கலாம். தங்களது ”News Feed” பக்கத்தில் தேவையில்லாத விஷயங்களை படிப்பதைத் தவிர்க்க இந்த வசதி செய்யப்பட்டுள்ளது என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.


    இந்த “Unfollow” என்ற பட்டன், பேஸ்புக் பக்கத்தில் மேற்புறத்தில், “Following”, “Like” ஆகிய பட்டன்களுக்கு அருகில் இருக்கும் என்றும், இதன் மூலம் குறிப்பிட்ட இடுகைகளை தடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    0 comments:

    Post a Comment