Saturday, 4 January 2014

Tagged Under: , ,

டைரக்டர்களை நேர்முகத்தேர்வு செய்யும் சிவகார்த்திகேயன்..!

By: Unknown On: 23:32
  • Share The Gag


  • தற்போது வேகமாக வளர்ந்து வரும் ஹீரோக்களில் சிவகார்த்திகேயன், விஜயசேதுபதி ஆகிய இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள். இதில் விஜயசேதுபதி தன்னிடம் கதை சொல்ல வருபவர்கள் படங்களில் பணியாற்றிய அனுபவமே இல்லாதவராக இருந்து, குறும் படம் இயக்கியவர் என்றால் நம்பி கால்சீட் கொடுத்து விடுவார். அப்படி அவர் நம்பி நடித்த எந்த படமும் அவரை ஏமாற்றவும இல்லை. அதனால்தான் இப்போது குறும்பட டைரக்டர்களுக்கு கோடம்பாக்கத்தில் வரவேற்பு அதிகரித்திருக்கிறது.

    ஆனால், சிவகார்த்திகேயன் அப்படியெல்லாம் எந்த படத்தையும் எடுத்தோம் கவுத்தோம் என்று ஒத்துக்கொள்வதில்லை. ஒருவர் தன்னிடம் கதை சொல்ல முயற்சி எடுக்கிறார் என்றதுமே அவரைப்பற்றிய மொத்த தகவல்களையும் முன்கூட்டியே நேர்முகத்தேர்வு நடத்துகிறார். அப்போது அவர்கள் சொல்லும் பதில்கள் தனக்கு நம்பிக்கை கொடுத்தால் மட்டுமே அடுத்த சிட்டிங்கில் கதை கேட்கிறார்.

    இல்லையேல், இன்னும் இரண்டு வருடத்துக்கு கால்சீட் டைரி புல்லாகி விட்டது. அதனால் கைவசம் உள்ள படங்களை முடித்த பிறகு கதை கேட்போம் என்று நாசுக்காக சொல்லி நழுவிக்கொள்கிறார். இருப்பினும் சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை கருத்தில் கொண்டு அவரது அலுவலகத்துக்கு கதைகளுடன் படையெடுககும் இயக்குனர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

    0 comments:

    Post a Comment