Friday, 3 January 2014

Tagged Under: ,

சாகசம் செய்ய தயாராகும் பிரசாந்த்..!!

By: Unknown On: 18:13
  • Share The Gag



  • சுமார் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு நடிகர் பிரசாந்த் மீண்டும் கோலிவுட்டிற்குத் திரும்பவுள்ளார்.


    ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். ‘வைகாசி பொறந்தாச்சு’ எனும் திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான இவர் ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, ஹலோ, பார்த்தேன் ரசித்தேன், தமிழ், வின்னர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.


    திருமணம் மூலம் பிரச்னையை சந்தித்த பிரசாந்த் அதன் பிறகு நடிப்பதை தவிர்த்து வந்தார். இந்நிலையில் ஒரு இடைவெளி விட்டு மம்பட்டியான், பொன்னர் சங்கர் போன்ற படங்களில் நடித்தார். இந்தப் படங்கள் சரியாக போகாததால் எந்த இயக்குனரும் அவரை கண்டுகொள்ளவில்லை. சிறிது காலம் பொறுத்து பார்த்த பிரசாந்த், தற்போது மீண்டும் சொந்த தயாரிப்பில் படம் எடுக்க களம் இறங்கியுள்ளார்.


    சாகசம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஹீரோயினியாக நடிக்க முன்னணி நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கதாநாயகன் மற்றும் வில்லன் ஆகிய இருவருமே பிரசாந்த்தான். வில்லன் கேரக்டருக்காக உடம்பை ஏற்றும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளார். ஜிம்மிற்கு சென்று ஆறுமணிநேரம் தினசரி உடற்பயிற்சி செய்து வருகிறார்.


    சாகசம் என்ற தலைப்பை அவருக்கு பரிந்துரைத்தவர்கள் பேஸ்புக்கில் உள்ள நண்பர்கள்தானாம். இதனை அவரே புத்தாண்டு அன்று அறிவித்துள்ளார்.

    0 comments:

    Post a Comment