ஹெச்.வினோத் இயக்கத்தில் நட்டு நட்ராஜ், இஷாரா ஆகியோர் நடித்திருக்கும் படம் 'சதுரங்க வேட்டை'. இப்படத்தை இயக்குநரும், நடிகருமான மனோபாலா தனது பிக்சர் ஹவுஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.
கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லரும், பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வரும் ஜூலை 25ம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்கிறது.
தமிழில் 'சதுரங்க வேட்டை' ரிலீஸ் ஆகும் முன்பே, தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் 'சதுரங்க வேட்டை' படத்தின் ரீமேக் மூலமாக பாலிவுட்டில் முதல்முறையாக காலடி எடுத்து வைக்க உள்ளது.
இந்தியில் அக்ஷய் குமார் அல்லது அஜய் தேவ்கன் ஆகிய இருவரில் ஒருவர் ஹீரோவாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் 'சதுரங்க வேட்டை'யை இயக்கிய வினோத் இந்தியிலும் ரீமேக் செய்கிறார்.
தெலுங்கு ரீமேக்கில் அல்லு அர்ஜூன் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இயக்குநர் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை.

0 comments:
Post a Comment