தமிழ் சினிமாவின் பெருமையை தமிழர்கள் மட்டும் கொண்டாடி வந்த நிலையில் அதை இந்திய அரங்கில் கொண்டாட 1963ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம்தேதி பிறந்தார் இந்த கும்பகோணத்து ஸ்பில்பர்க். பாரதிராஜா, பாக்யராஜ், பாலுமகேந்திரா, மணி ரத்னம் போன்ற ஜாம்பவான்கள் தமிழ் சினிமாவின் குடுமியை பிடித்து கொண்டிருந்த நேரத்தில், தன் கையில் உள்ள பேனாவை மட்டும் நம்பி பல சமூக சீர்கேடுகளை அழிக்க வேண்டும் என்று மனதில் உறுதியுடன், எப்படியாவது அதை சினிமா என்ற தாகத்தால் போக்கி விட வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்தார்.
தன் கடுமையான உழைப்பினால் பணப்பேராசை பிடித்த பல அரசியல்வாதிகளின் முகத்திரையை ‘ஜென்டில்மேனாக’ நின்று கிழித்தார். அதேபோல் நடிகனுக்காக தான் சினிமா என்று இருந்த நிலையில், என்றுமே கதை, கதாபாத்திற்கு மட்டும் தான் சினிமா, இதை யாராலும் மாற்ற முடியாது என்று உலக நாயகனையே கிழவனாக நடிக்க வைத்து வெற்றி கண்டார்.
நம் ஏழை மக்கள் பலர் சென்னை போன்ற மாநகரத்தையே அண்ணாந்து பார்த்து கொண்டிருந்த நேரத்தில், வெள்ளை துணியில் உலகத்தையே சுற்றி காட்டினார் ஷங்கர். ஏன் இவரால் தமிழ் நாட்டில் கேன்சர் வியாதி குறைக்கப்பட்டிருக்கிறது என்றால் நீங்கள் நம்புவீர்களா, ஆம் இவர் படத்தில் வரும் பாடலுக்கு கூட யாரும் புகைப்பிடிக்க போவதில்லை.
தமிழ் சினிமாவில் எடுக்கும் எந்தவொரு புதிய முயற்சிக்கும் அஞ்சாமல் அதை முடியாது என்று சொல்லாமல், அதை முடித்து காட்டும் சினிமா ’காதலன்’. சமூகத்தில் வாழும் ஊழல் அரசியல்வாதிகள், லஞ்சம் வாங்குபவர் போன்றோர்களுக்கு வேண்டுமானால் இவர் ‘அந்நியனாக’ தெரியலாம். ஆனால் நேர்மையாக அரசாங்கத்தை ஏமாற்றாமல் வாழும் ஒவ்வொருவருக்கும் ‘முதல்வனாக’ இருக்கும் இந்தியன்.
இன்றைய தமிழ் சினிமாவில் பல இளைய இயக்குனர்களுக்கு இவர் தான் ‘ஐ’ ஓப்பனர், ஆனால் தமிழகமே எதிர்பார்ப்பது இவரின் ‘ஐ’ எப்போது ஓப்பனாகும் என்று தான்.
தமிழ் சினிமாவை இந்திய அளவில் இல்லை, உலக அரங்கில் கொண்டு செல்ல துடிக்கும் இந்த மகாகலைஞன் தன் 51வது வயதில் அடி எடுத்து வைக்கும் இந்நன்நாளில் இவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதில் நாம் பெருமையடைகிறோம்..!

0 comments:
Post a Comment