Saturday, 31 August 2013

Tagged Under: ,

கம்யூட்டருக்கு அடிமையாகி போன சிறார்களுக்கான சிறப்பு முகாம்கள்: ஜப்பான் அரசு உத்தரவு!

By: Unknown On: 11:29
  • Share The Gag
  • தற்போதைய காலகட்டத்தில் கம்யூட்டர் மற்றும் இணையதளத்தின் பயன்பாடு மக்களின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு விஷயமாக மாறியுள்ளது. அதே சமயம், பல்வேறு சிறார்கள் கம்யூட்டருக்கு அடிமை ஆகிப் போவது அவர்களின் இயல்பான வெளி நடவடிக்கைகளைப் பாதிக்கத் துவங்குவதாக மாறுவது கவலைக்குரிய செயலாக தோன்றுகின்றது.
    இந்நிலையில் ஜப்பான் நாட்டின் சமீபத்திய ஆய்வின்படி, ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவயதினர் இணையதளம் உபயோகிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.நடுத்தர மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களில் 5,18,000 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை கூறுகின்றது.

    31 - internet addict
     

    இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருவதாக அந்நாட்டு அரசின் தகவல் அதிகாரி பத்திரிகை செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளார்.மேலும், 98,000 இளைஞர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 8.1 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்களிடம் இது ஒரு நோயாகவே காணப்படுகின்றது என்றும், அவர்கள் ஊட்டச்சத்து குறைவாலும், தூக்கமின்மையாலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது 

    இதனை சீர்படுத்தும்விதமாக, ஜப்பான் அரசு சிறுவர்களுக்கான சிறப்பு முகாம்களை நடத்தத் திட்டமிட்டுள்ளது..இந்த முகாம்களில் சிறுவர்கள், இணையதளம், ஸ்மார்ட்போன், மற்றும் வீடியோ விளையாட்டுகள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டு, விளையாட்டுகளிலும், வெளி நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தப்படுவார்கள் அவர்களின் டிஜிட்டல் பழக்கங்களை கட்டுக்குள் வைத்திருக்கும் வண்ணம், அந்த மாணவர்களுக்கு சிறப்பு கல்வி ஆலோசகர்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

     

    Japan Internet ‘Fasting Camps’ Aim To Treat Screen-Addicted Kids
     

    ********************************************* 
    The ministry of education in Japan has a plan to pull kids away from screens and into the great outdoors, the Daily Telegraph reports. They’re aiming to introduce Internet “fasting camps” where children who are deemed Internet-addicts will participate in outdoor activities and get appropriate counseling in an unplugged environment.

    0 comments:

    Post a Comment