Saturday, 31 August 2013

Tagged Under: ,

ஸ்டெம் செல் மூலம் மனித மூளையை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்

By: Unknown On: 20:32
  • Share The Gag


  • human_brain_002 


    முதன் முறையாக ஸ்டெம் செல்களை பயன்படுத்தி மனித மூளையை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

    விஞ்ஞான ஆராய்ச்சிக்காக நுண்ணுயிர் கிருமிகளை வளர்க்க பெட்ரி தட்டுகள் பயன்படுத்தப்படுகிறது.



    இந்த தட்டுகளில் முதன் முறையாக ஸ்டெம் செல்லை பயன்படுத்தி மனித மூளையின் ஒத்த பகுதியை உருவாக்கும் முயற்சியில் ஆஸ்திரிய நாட்டின் தலைநகரான வியன்னாவின் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    தற்போது அந்த பகுதி ஒன்பது வாரக் கருவினுடைய மூளையை ஒத்தது போன்ற தோற்றத்தில் மூன்றிலிருந்து நான்கு மில்லிமீட்டர் அளவில் வளர்ந்துள்ளது.



    இன்னும் முழுவதும் வளர்ச்சியடையாத போதிலும், மூளையைப் போன்றே முதுகு புறணி, முன்மூளையின் கீழ்ப்புறம் மற்றும் முதிராத ஒரு விழித்திரை போன்றவை அதில் உள்ளன.



    இதில் உருவாகியுள்ள பகுதிகள் சரியானவை என்றபோதிலும் அவை ஒருங்கிணைந்து உருவாகவில்லை என்று இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள துணைச்செயலர் ஜுவெர்கன் நோபிளிச்  தெரிவித்துள்ளார்.



    மேலும் மூளை பாதிப்பினால் ஏற்படக்கூடிய மனநோய் மற்றும் குழந்தைகளிடத்தில் காணப்படும் ஆட்டிசம் போன்ற வியாதிகள் குறித்து ஆராய்வதற்காகவே இந்த மாதிரிகள் உபயோகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

    0 comments:

    Post a Comment