Saturday, 5 October 2013

Tagged Under:

மூடருக்கு அறிவுரை கூறலாமா!! (நீதிக்கதை)

By: Unknown On: 22:06
  • Share The Gag



  • ஒரு காட்டில்...ஒரு நாள் ...நல்ல மழை பெய்துக் கொண்டிருந்தது.
     

    ஒரு குரங்கு குளிர் தாங்காமலும்..மழையிலிருந்து காப்பாற்றிக்கொள்ளவும் ஒரு மரத்தினடியில் ஒதுங்கிக்கொண்டது.
     

    மரத்தில் பறவை ஒன்று கூடு கட்டி தன் குஞ்சுகளுடன் மழைக்கு அடக்கமாக உட்கார்ந்து கொண்டிருந்தது.
     

    குரங்கைப் பார்த்து பறவை மனம் பொறுக்காமல் ' குரங்காரே..என்னைப்பாரும்...வெய்யில் மழையிலிருந்து என்னையும் என் குஞ்சுகளையும் காப்பாற்றிக்கொள்ள கூடு கட்டியிருக்கிறேன்.அதனால் தான் இந்த மழையிலும் சுகமாய் இருக்கிறேன்.நீரும் அப்படி செய்திருக்கலாமே என்றது...
     
     

    குரங்கிற்கு கோபம் தலைக்கேறியது..'உன்னைவிட வலுவானவன் நான்..எனக்கு நீ புத்தி சொல்கிறாயோ....
     

    இப்போது உன்னையும் உன் குஞ்சுகளையும் என்ன செய்கிறேன் பார்' என மரத்தில் விடுவிடு என ஏறி பறவையின் கூட்டை பிய்த்து எறிந்தது.
    பறவைக்கு அப்போதுதான் புரிந்தது' 
     
     
    அறிவுரைகளைக்கூட.....அதைக்கேட்டு நடப்பவர்களுக்குத்தான் சொல்லவேண்டும்  என்று.
     

    நாமும்...ஒருவருக்கு அறிவுரை வழங்குமுன் அவர் அதன்படி நடப்பாரா என்று புரிந்துகொண்டபின்னரே அறிவுரை வழங்கவேண்டும்.
     
     

    0 comments:

    Post a Comment