Saturday, 5 October 2013

Tagged Under:

“ஃபேஸ்புக், ட்விட்டர்தான் இந்த படத்தை காப்பாற்றியிருக்கிறது! – மிஷ்கின் ஓப்பன் டாக்!

By: Unknown On: 02:18
  • Share The Gag

  • “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படம் இன்று தமிழகமெங்கும,ஒரு வாரமா ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆனால் என்னிடம் போஸ்டர் ஓட்டக் கூட காசு இல்லை. கடன் வாங்கித்தான் இப்போது திருச்சிக்கு வந்திருக்கிறேன். ஃபேஸ்புக், ட்விட்டர்தான் இந்த படத்தை காப்பாற்றியிருக்கிறது. எனினும் இந்த படத்தை விளம்பரப்படுத்த என்னிடம் காசு இல்லை. கோவையை அடுத்து திருச்சியிலும் போஸ்டர் ஒட்டும் பணியில் ஈடுபட போகிறேன்” என்று கூறி கலங்கினார் மிஷ்கின்.


    சமீபத்தில் திரைக்கு வந்து அனைவரின் பாராட்டையும் பெற்று வரும் படம் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ ஆனால் இந்த படத்தின் இயக்குனரும் ,தயாரிப்பாளருமான மிஷ்கின், தியேட்டரில் கூட்டம் அதிகம் வராததால் ஊர் ஊராக சென்று போஸ்டர் அடிக்கும் பணியை செய்துவருகிறார்.


    4 - miskin poster



    சமீபத்தில் திருச்சிக்கு வந்த மிஷ்கின் பத்திரிகையாளர்களையும், சினிமா ரசிகர்களை சந்தித்து மனம் குமுறினார். அப்போது”இந்த படம் பலரின் பாராட்டை பெற்றிருப்பது சோகத்திலும் ஒரு சந்தோஷத்தை தருகிறது இந்த படத்தை தயாரிக்க யாருமே முன்வரவில்லை. என் கதையைக் கேட்டு தயாரிப்பாளர்கள் வரிசையில் நின்றார்கள் என்றெல்லாம் பொய் சொல்லமாட்டேன். ‘முகமூடி’ என்ற தோல்விப்படம் கொடுத்த பண நெருக்கடி, மன நெருக்கடிகளுக்கிடையில் ‘முகமூடி’ படத்திற்கு பிறகு ஆறாவது படம் இயக்கும் என்னை நம்பி ஒரு தயாரிப்பாளர் கூட வரவில்லை. அதனால்தான் நானே இந்த படத்தை தயாரித்தேன்.



    ‘முகமூடி’க்கு பிறகு அடுத்த படம் எடுக்கலாம் என்று இருந்தபோது என்னை சுற்றி இருந்தவர்கள் நிறைய பேர் மஞ்ச சேலை, ரோஜா நிற சேலையில் இரண்டு கிளுகிளுப்பு பாட்டு ,கதைக்கு சம்பந்தமே இல்லாத காமெடி ட்ராக் இந்த வகையாறாவில் ஒரு படம் இயக்க சொன்னார்கள். ஆனால் நான் என்னை சமரசம் செய்து கொள்ளவில்லை. என் அலுவலகத்தை அடமானம் வைத்துதான் இந்த படத்தின் கதையையே எழுதினேன். உலகத்தில் அதிகமான கதையம்சம் கொண்டது ராமாயணமும், மகாபாரதமும்தான்.



    ஹாலிவுட் தரத்தில் படம் இயக்கவேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் இந்த படத்தை நான் ஒரு பாட்டு கூட இல்லாமல் இயக்க முக்கிய தூண்டுகோலாய் இருந்தது. நான் இந்த படத்தை எனக்கான சுய பரிசோதனை முயற்சியாகத்தான் எடுத்து கொண்டேன். இந்த படத்தில் ஒரு காதல் சீன் வைக்க கூட இடம் கிடையாது. அதுமட்டுமில்லாமல் எனக்கு 42 வயதாகிறது; நான் மரத்தை சுற்றிவந்து டூயட் எல்லாம் பாட முடியாது. அதனால் படத்தில் டூயட் இல்லை. முதல் படத்தில் தெரியாத்தனமாக வைத்த குத்து பாட்டு தெரியத்தனமாக ஓடிபோச்சு. அடுத்த படத்திலும் தயாரிப்பாளரின் வற்புறுத்தலின் பேரில் வாய்த்த குத்து பாட்டு பயங்கர ஹிட் அடித்து, என்னை எல்லோரும் குத்துபாட்டு இயக்குனர் என அழைக்க ஆரம்பித்தார்கள். அது எனக்கு நாகரிகமாகப்படவில்லை.


    இந்த படத்திலும் குத்து பாட்டில்லை என்றால் பெட்டி வாங்க மாட்டோம் என சொல்லிவிட்டார்கள். இந்த படத்தை விநியோகஸ்தர்களுக்கு நான் ‘நந்தலாலா’ தந்த அனுபவத்தால் போட்டு காட்டவில்லை. ஆனால் அதையும் மீறி ரிலீஸ் ஆனது பத்திரிகையாளர்களின் நேர்மையான பாராட்டுகளால்தான். இந்த கதையில் யாருமே ஓநாய் பத்திரத்தில் நடிக்கமாட்டார்கள் என தெரியும். அதனால்தான் என் கதையை நம்பி நானே களத்தில் இறங்கினேன்.


    இதுவரை 6 படம் செய்துருக்கிறேன். ஒரு கோடி ரூபாய்க்கு கூட இந்த படத்தின் சாட்டிலைட்ஸ் உரிமை போகவில்லை. என்னுடைய 6 படங்களையும் பாருங்கள் ஒரு படத்திலாவது ஏதேனும் ஒரு பெண்ணை மோசமாக காட்டியிருக்கிறேனா? வயது குறைந்த இளைஞர்கள், வயதானவர்களை கிண்டல் பண்ணும் காட்சி இருந்திருக்கிறதா ? அவ்வளவு கண்ணியமாக படம் எடுத்ததுக்கு எனக்கு கிடைத்த பரிசுதான் இது.



    ஒரு கோடி ரூபாய்க்கு கூட சாட்டிலைட்ஸ் உரிமை போகவில்லை. நல்ல படங்களை எடுக்கவேண்டும் என நினைத்தது தப்பா? இந்த படத்திற்காக 107 கிலோவில் இருந்து 87 கிலோவாக எடை குறைந்திருக்கிறேன். கடைசியில் இந்த படத்தை யாருமே வாங்கவில்லை. 30 லட்ச ருபாய்க்காக நாய் மாதிரி அலைந்தும் கடன் கிடைக்கவில்லை. முதல் நாள் 30 லட்ச ருபாய் கொடுக்காததால் 10 தியேட்டர்களில் எனது படத்தை எடுத்துவிட்டார்கள். சரி என நம்பிக்கை இழந்து மீண்டும் தெருவுக்கே வந்துவிடலாம் என எண்ணினேன். ஆனால் அடுத்தநாள் உலகம் முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்தது.




    அந்த ஒரே காரணத்தால்தான் இன்று ஒரு வாரமா ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆனால் என்னிடம் போஸ்டர் ஓட்டக் கூட காசு இல்லை. கடன்வாங்கித்தான் இப்போது இங்கே வந்திருக்கிறேன். ஃபேஸ்புக், ட்விட்டர்தான் இந்த படத்தை காப்பாற்றியிருக்கிறது. எனினும் இந்த படத்தை விளம்பரப்படுத்த என்னிடம் காசு இல்லை. கோவையை அடுத்து திருச்சியிலும் போஸ்டர் ஒட்டும் பணியில் ஈடுபட போகிறேன்” என்று கூறி கலங்கினார் மிஷ்கின்.

    0 comments:

    Post a Comment