ரசிகர்களின் பலத்த வரவேற்புக்கு மத்தியில் தல அஜித்தின் ஆரம்பம் படம் இன்று(அக்டோபர் 31) தமிழகம் எங்கும் வெளியானது. |
பில்லா வெற்றிக்கு பிறகு விஷ்ணுவர்த்தன்- அஜித் கூட்டணியில் உருவான படம் ஆரம்பம். இப்படத்தில் அஜித்துடன் ஆர்யாவும் நடித்துள்ளார். இவர்களுக்கு ஜோடியாக நயன்தாரா- டாப்சி நடித்துள்ளனர். இவர்கள் தவிர தெலுங்கு நடிகர் ராணா டகுபதி, அதுல் குல்கர்னி, ஆடுகளம் கிஷோர் என்று பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், ஸ்ரீசத்யசாய் மூவிஸ் சார்பில் ரகுராம் தயாரித்துள்ளார். இப்படம் இன்று தமிழகம் முழுக்க 1400 தியேட்டர்களில் ரிலீசானது. ஏற்கனவே சென்னை, கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் அஜித்தின் ஆரம்பம் படம் ஒருவாரத்திற்கு புக்காகிவிட்டது. சென்னையில் அதிரடி பட்டாசுகளோடு, ரசிகர்களின் கூட்டம் சென்னை தியேட்டர்களில் நிரம்பி வழிந்தது. சென்னை எஸ்.எஸ்.பங்கஜம் தியேட்டரில் அதிகாலை 3 மணிக்கே படம் வெளியானது. சென்னை, ராக்கி தியேட்டரில் 4.30 மணிக்கும், காசி தியேட்டரில் 5மணிக்கும் வெளியானது, கோவையில் அதிகாலை 4 மணிக்கு படம் தொடங்கியது. சென்னையில் ரசிகர்களின் கூட்டத்தோடு சிம்பு, இயக்குநர் ராஜேஷ், டாப்சி, ஞானவேல் ராஜா, பாண்டிராஜ், தயாரிப்பாளர் தாணு உள்ளிட்ட மேலும் பல நட்சத்திரங்களும் அதிகாலையிலேயே அஜித்தின் ஆரம்பம் படத்தை சென்று பார்த்தனர். அஜித்தின் தீவிர ரசிகரான நடிகர் சிம்பு ஆரம்பம் படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்தவர், படத்தில் தல வந்து ஒரு காட்சியில் கண்ணாடியை தூக்கி போட்டு அதை மாட்டுவார், அந்த காட்சியை பார்த்துவிட்டு நான் ஒரு நடிகன் என்பதையும் மறந்து ஒரு ரசிகனாக கைதட்டி, விசில் அடித்து ஆரவாரம் செய்தேன் என்று தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் தாணு, நலிந்து போன தயாரிப்பாளர் ஒருவருக்கு முதன்முறையாக வாய்ப்பு கொடுத்த ஒரே நடிகர் அஜித் தான். அந்த மனப்பான்மை தல ஒருத்தருக்கு மட்டும் தான் இருக்கும் என்று கூறியுள்ளார். சென்னை தவிர்த்து மதுரை, கோவை, திருச்சி, சேலம் என்று அனைத்து ஏரியாக்களிலும் ஆரம்பம் படத்திற்கு கூட்டம் களைகட்டி காணப்படுகிறது. |
Thursday, 31 October 2013
Tagged Under: சினிமா விமர்சனம்..!
"தல" ஒரு காட்சியில் கண்ணாடியை தூக்கி போட்டு மாட்டுகிறார்!
By:
Unknown
On: 17:28
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment