Monday, 14 October 2013

Tagged Under:

‘ஜில்லா’ நாயகன் விஜய் நடத்திய ரகசிய மீட்டிங்!

By: Unknown On: 20:09
  • Share The Gag
  • நடிகர் விஜய்க்கும் ஆட்சியாளர்களுக்கும் பனிப்போர் நடந்து வருவது தமிழகத்துக்கே தெரியும். முந்தைய ஆட்சியில் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார் என்பதற்காகவே அவருடைய சுறா, வேட்டைகாரன், காவலன் போன்ற படங்களை அன்றைய ஆட்சி முடக்கியதால், அவர் அதிமுகவிடம் சென்று சரண் அடைந்தார். பின்னர் ஆட்சி மாறியபின், அவருடைய பிறந்தநாள் அன்று நடக்க இருந்த கூட்டத்திற்கு அனுமதி மறுத்து கூட்டத்தை நடத்தவிடாமல் அதிமுக ஆட்சியும் கடந்த ஆட்சி போல தொந்தரவு செய்தது.



     தலைவா படத்துக்கு தொடர்ந்து இடைஞ்சல் கொடுத்துவந்து படத்தை சிறிதுகாலம் முடக்கி வைத்தது என ஆட்சியாளர்களிடம் படாதபாடு பட்டுவந்தார் விஜய்.இதற்கிடையில் சினிமா நூற்றாண்டு விழாவில் அவர் என்ன பேசப போகிறார் என்பதை முன்னரே எழுதி வாங்கி படித்துப் பார்த்துதான் அனுமதித்தார்களாம்.


    14 - vijay

     


    இதையெல்லாம் எண்ணிப்பார்த்த விஜய், இனிமேல் அரசியலில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்திருந்தால்தான் தன்னுடைய எதிர்காலத்திற்கு நல்லது என்று முடிவு செய்துள்ளார் என்றும் எந்த ஆட்சி வந்தாலும் நம்மை வளரவிட மாட்டார்கள். எனவே இப்போது ஒரு அதிரடியான முடிவை எடுத்தே தீரவேண்டும் என்ற முடிவில் உள்ளார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன..


    எனவே ரசிகர் மன்ற தலைவர்களுடன் ஒரு ரகசிய மிட்டிங் நடத்த திட்டமிட்டார். தமிழ்நாட்டில் எங்கு மீட்டிங் நடந்தாலும் சிக்கல் என்பதை அறிந்து, ஜில்லா பட ஷூட்டிங் நடக்கும் கேரளாவிற்கு ரசிகர் மன்ற தலைவர்களை மட்டும் ரகசியமாக வரவழைத்து கேரள தலைநகரில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் ரகசிய கூட்டம் ஒன்றை நடத்தியதாக தெரிகிறது.அபபோது “நாம் யார் என்பதை ஆட்சியாளர்களுக்கு உணர்த்தவேண்டும். வரும் பாராளுமன்ற தேர்தலில் நம்முடைய சக்தியை வெளிக்காட்டினால்தான் தமிழகத்தின் இரண்டு கட்சிகளும் நம்மை பார்த்து பயப்படும். அதற்கு இப்போதிருந்தே நம்மை நாம் தயார் செய்ய வேண்டும்” என ரசிகர்களிடையே மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளாராம்.


    இந்த ரகசிய மீட்டிங் முடிந்து கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில். இப்போதுதான் கோலிவுட்டில் சிறிதுசிறிதாக ரகசியம் கசிந்து வருகிறது என்பது அடிசினல் தக்வல்.

    0 comments:

    Post a Comment