Saturday, 26 October 2013

Tagged Under:

காரணமில்லாமல் ஏதும் படைப்பதில்லை (நீதிக்கதை)

By: Unknown On: 13:11
  • Share The Gag


  • ஒரு நாள் எலி ஒன்றைப் பூனை ஒன்று துரத்த ...தன் உயிரைக் காத்துக்கொள்ள எலி வேகமாக தன் வலைக்குள் புகுந்தது.எலியைக் காணாத பூனை திரும்பிச் சென்றது.வெளியே வந்த எலி நத்தை ஒன்று  மெதுவாக ஊர்ந்து செல்வதைப் பார்த்தது.

    நத்தையை கேலி செய்த எலி ....'நத்தையே உன் முதுகில் வீட்டை சுமந்து செல்கிறாயே ஏன்?நான் எவ்வளவு வேகமாக ஓடுகிறேன்.அதனால் ஆபத்திலிருந்து என்னால் தப்பிக்கமுடிகிறதுஆனால் அப்படி ஆகும்போது உன்னால் என்ன செய்ய முடியும் என்றது.

    அதற்கு நத்தை ...'நீ உயிருக்கு பயந்து வேகமாக ஒடுகிறாய்..ஆனால் சமயத்தில் பூனையிடம் மாட்டிக்கொண்டால் உன் சாவு நிச்சயம்.ஆனால் நானோ....கூட்டை முதுகில் சுமந்து செல்வதால்...எப்போழுது ஆபத்து வந்தாலும் ...அந்த கூட்டுக்குள்ளையே பாதுகாப்பாக பதுங்கிக் கொள்வேன்..என்றது.

    அப்போதுதான் எலிக்கு ஆண்டவன் காரணமில்லாமல் எதையும் படைப்பதில்லை என புரிந்தது.

    0 comments:

    Post a Comment