Sunday, 24 November 2013

Tagged Under: ,

பால்கி டைரக்ஷனில் அக்ஷரா நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது -கமல்ஹாசன்!

By: Unknown On: 11:17
  • Share The Gag
  •  

    பால்கி டைரக்ஷனில் அக்ஷரா நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

    பேட்டி

    கோவாவில் நடந்த சர்வதேச படவிழாவுக்கு வந்த நடிகர் கமல்ஹாசன், அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    திரையுலகில் என் மூத்த மகள் சுருதிஹாசன் அந்தஸ்து எப்படி அமையும்? என்று நான் கவலைப்பட்ட காலம் முடிந்து விட்டது. இனி, அவரைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. தென்னிந்திய திரையுலகிலும், இந்தி பட உலகிலும் சுருதி பல்வேறு டைரக்டர்களிடம் பணிபுரிந்து இருக்கிறார். 10 படங்களில் நடித்து இருக்கிறார்.

    அவர் வேலையை அவர் சிறப்பாக செய்கிறார். சுருதி பற்றி நான் கவலைப்பட வேண்டியதில்லை. அவர் சரியான பாதையில் போய்க்கொண்டிருக்கிறார்.

    அக்ஷரா

    பா படத்தின் டைரக்டர் ஆர்.பால்கியின் அடுத்த படத்தில்,  அக்ஷரா நடிப்பது பற்றி மகிழ்ச்சி அடைகிறேன். (இந்த படத்தில், தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். ஒரு முக்கிய வேடத்தில் அமிதாப்பச்சன் நடிக்கிறார்.) அக்ஷராவுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சுருதி, அக்ஷரா இரண்டு பேரிடமும் என் கருத்துக்களை திணிப்பதில்லை. நடிப்பு, அவர்கள் ரத்தத்தில் இருக்கிறது. அவர்கள் இருவருக்குமே நான் எந்த பயிற்சியும் அளிப்பதில்லை. அவர்களின் வளர்ச்சியில் என் பங்களிப்பு எதுவும் இல்லை.

    விஸ்வரூபம்-2

    விஸ்வரூபம்-2 படத்தின் இறுதிகட்ட வேலைகள் இப்போது நடைபெறுகின்றன. அனைத்து கட்சியினரும் இந்த படத்தை வரவேற்பார்கள். முன்பு நடந்தது போன்ற சம்பவங்கள் எதுவும் இந்த படத்தில் இருக்காது.

    விஸ்வரூபம் படத்தின் ஒரு பகுதி அமெரிக்காவில் நடப்பது போல் இருந்தது. அதன் இரண்டாம் பாகம் இந்தியாவில் நடப்பது போல் கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

    0 comments:

    Post a Comment