Friday, 22 November 2013

Tagged Under:

பூரண குணமடைந்து வீடு திரும்பினார் அப்துல் கலாம்!

By: Unknown On: 21:15
  • Share The Gag
  •  உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பூரணகுணமடைந்தார். இதையடுத்து அவர் வீடு திரும்பினார்.

    அப்துல்கலாம் சமீபத்தில் வீட்டில் தவறி விழுந்தார். இதில் அவரது நெற்றியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் டெல்லி இராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்துல்கலாமிற்கு சில தினங்களாக கடுமையான காய்ச்சலும் இருந்தது. வைத்தியர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

    அதை தொடர்ந்து அப்துல்கலாம் பூரணமாக குணம் அடைந்தார். இதையடுத்து நேற்று இரவு மருத்துவமனையில் இருந்து வௌியேறினார்.

    தற்போது டெல்லி ராஜாஜி மார்க் பகுதியில் உள்ள வீட்டில் அப்துல் கலாம் ஓய்வு எடுத்து வருகிறார். அவர் நன்றாக இருக்கிறார். வழக்கமான பணிகளில் ஈடுபடுகிறார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அப்துல்கலாம் முழுமையாக குணம் அடைந்து விட்டார். என்றாலும் குறைந்தது 10 நாட்கள் அவர் பயணம் செய்யக்கூடாது என்று வைத்தியர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    82 வயதாகும் அப்துல்கலாம் நாடுமுழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் விழாக்களில் பங்கேற்று மாணவர்களை சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    0 comments:

    Post a Comment