Saturday, 30 November 2013

Tagged Under: , , ,

சருமத்தை பளபளக்க வைக்கும் சில அற்புத எண்ணெய்கள்!!!

By: Unknown On: 15:33
  • Share The Gag

  • அழகான மற்றும் பளபளப்பான தோலை பெற வேண்டும் என்றால் தோலை சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும். உங்கள் தோலை பளபளப்பாக வைக்க செய்ய வேண்டியவற்றில் ஒன்றாக அதற்கு மிகவும் தேவையான எண்ணெய் சத்துக்களை அளிக்க வேண்டும். மிகவும் தேவையான எண்ணெய்கள் என்று வரும் போது, அவை சென்ட் பாட்டில்களில் விற்கப்படும் தாவரச் சாறுகளை குறிப்பிடுவதில்லை. இந்த எண்ணெய்களுக்கு உங்களுடைய மன அழுத்தத்தை குறைக்கக் கூடிய சிறந்த குணங்கள் உள்ளன. இவை வலி நிவாரணிகளாகவும் மற்றும் சக்தியை வழங்குபவையாகவும் கூட செயல்படுகின்றன. இவை மட்டுமல்லாமல் உங்கள் தோலையும் பளபளக்கச் செய்கின்றன.

    மூப்படைதல், ஹார்மோன் சமனிலையற்ற தன்மைகள் மற்றும் பிற காரணங்களால் நமது தோல் பகுதி பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகிறது. இந்த எண்ணெய்கள் பிரச்னைகளை சமாளித்து, தோலை முறையாக பராமரிக்கின்றன. எண்ணெய் கொண்டு தோலை பராமரிப்பது மிகவும் சிறந்த வழிமுறையாகவும் மற்றும் இது அரோமா தெரபியின் ஒரு பகுதியாக இருந்து உங்கள் தோலின் அடிப்பகுதி வரையிலும் சென்று, உள்ளிருந்தே வேலை செய்யும். நீங்கள் இந்த எண்ணெய்களை தொடர்ச்சியாக பயன்படுத்தி குறிப்பிடத்தக்க பிரச்சனைகளிலிருந்து உங்கள் தோலை குணப்படுத்த முடியும்.

    எண்ணெயை உங்கள் தோலின் மேல் தடவும் போது அதன் தரம், உருவாக்கம், நீட்சித்தன்மை போன்றவை உங்கள் மனதிற்கு சந்தேகத்தை உருவாக்கும், இந்த எண்ணெய்களை குறைவான அளவே பயன்படுத்தினால் கூட உங்கள் தோல் எளிதில் கிரகித்துக் கொள்ளும். இது உங்கள் தோல் பகுதியின் துளைகளை அடைத்துக் கொள்ளும் என்ற சந்தேகத்தை முழுமையாக நீக்கி விடும். இங்கே உங்களுடைய தோல் பகுதியை பளபளக்க வைக்கும் சில முக்கியமான எண்ணெய்களைப் பற்றி கொடுத்துள்ளோம். மேற்கொண்டு படித்து, மேலும் தெரிந்து கொள்ளுங்கள்.

    பாதாம் எண்ணெய்

     பொதுவாகவே தோல் பராமரிப்புக்காக பயன்படுத்தப்படும் பாதம் எண்ணெய் பாதாம் கொட்டையை காய வைத்து அதிலிருந்து எடுக்கப்படுகிறது. பாதம் எண்ணெயில் உயர்வான ஈரப்பதத்தை ஏற்படுத்தும் தன்மைகளும் மற்றும் தோலுக்கான சத்துக்களும் உள்ளன. தோலினால் எளிதில் கிரகித்துக் கொள்ளப்பட்டு, அதன் மூலமாக பளபளப்பை தோன்றச் செய்வதாக பாதம் எண்ணெய் உள்ளது. இது தோல் அரிப்பையும், வறட்சியையும் சரி செய்கிறது.

    ஆர்கன் எண்ணெய் (Argan oil)

    எண்ணெய் கொண்டு தோலை பராமரிக்கும் வேளைகளில் ஆர்கன் எண்ணெய் மிகச்சிறந்த நிவாரணியாக உள்ளது. உங்கள் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் கோடுகளை நீக்கும் தனித்தன்மையான குணத்தை கொண்டதாக ஆர்கன் எண்ணெய் உள்ளது. வலியில் உள்ள சருமத்தை குணப்படுத்தவும் மற்றும் கறைகளை நீக்கவும் இது உதவுகிறது. இது மட்டுமல்லாமல், ஆர்கன் எண்ணெயில் உள்ள ஆக்ஸிஜன் எதிர் பொருட்கள் கிருமிகளை அழிப்பவையாகவும் உள்ளன.

    பபாஸ்சு எண்ணெய் (Babassu oil)

    பிரேசிலின் பபாஸ்சு பனையிலிருந்து தயாரிக்கப்படும் இந்த எண்ணெயில் தோலை பளபளக்க வைக்கும் எண்ணற்ற குணங்கள் உள்ளன. இயற்கையாக தோலை ஈரப்பதமாக வைக்கவும் மற்றும் தோலை அரிப்பு போன்ற பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கவும் இந்த எண்ணெய் உதவுகிறது. மேலும், இந்த எண்ணெயை தலைமுடி பராமரிப்பிற்கும் பயன்படுத்தலாம்.

    ஆமணக்கு எண்ணெய்/விளக்கெண்ணெய்

     கொழுப்பு அமிலங்கள் அதிகளவில் உள்ள ஆமணக்கு எண்ணெயை சிறிதளவு தோலில் தடவினாலே போதும், எளிதில் கிரகித்துக் கொள்ளும். ஈரப்பத்தத்தை ஏற்படுத்தும் பொருளாகவும் மற்றும் தோலின் ஈரப்பதத்தை நிலைநிறுத்தவும் இந்த எண்ணெய் உதவுகிறது. இந்த எண்ணெயும் தலைமுடி பராமரிப்பிற்கான எண்ணெய்களில் ஒன்றாக உள்ளது.

    தேங்காய் எண்ணெய்

     தோல் பராமரிப்பிற்காக மிகவும் பொதுவாகவே பயன்படுத்தப்படும் எண்ணெய்களில் ஒன்றாக தேங்காய் எண்ணெய் உள்ளது. இந்த எண்ணெயில் தோல் மற்றும் தலைமுடி பராமரிப்புக்கான இடுபொருட்கள் நெடுங்காலமாகவே உள்ளன. இது தலைக்குள் நன்றாக ஊடுருவி சென்று தலைமுடியின் செழித்து வளரச் செய்கிறது. தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்பட்ட தோல் மென்மையாகவும் மற்றும் பஞ்சு போலவும் இருக்கும்.

    ஜோஜோபா எண்ணெய் (Jojoba oil)

    எண்ணெய் வழியாக தோலை பராமரிக்கும் போது மறக்கக் கூடாத விஷயமாக ஜோஜோபா எண்ணெய் உள்ளது. இது ஒரு திரவ மெழுகாக உள்ளது. ஜோஜோபா எண்ணெயில் சில வலி எதிர்ப்பு பொருட்களும் மற்றும் தோலுக்குள் ஆழமாக பரவும் தன்மையும் உள்ளது. இந்த எண்ணெய்க்கு தோலை பளபளப்பாக்கும் தன்மையும் உள்ளது.

    வேப்ப எண்ணெய்

     பாக்டீரியா எதிர் தன்மைகளுக்காக அறியப்படும் வேப்ப எண்ணெயை மருந்தாகவும், தோல் பராமரிப்பிற்கும் பரவலாக பயன்படுத்தி வருகிறார்கள். ஆயுர்வேத சிகிச்சையில் முதன்மையான இடத்தைப் பெற்றதாகவும் மற்றும் நெடுங்காலமாகவே தோல் பராமரிப்பிற்கு பயன்படுத்தப்படுவதாகவும் வேப்ப எண்ணெய் உள்ளது. சொரியாஸிஸ், எக்ஸீமா, அரிப்பு போன்ற பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டதாகவும் இது உள்ளது.

    ஆலிவ் எண்ணெய்

     தோலின் ஈரப்பதம் குறைவதை தடுக்கவும் மற்றும் ஈரப்பதத்தை ஏற்படுத்துவதில் திறன் மிக்க பொருளாகவும் ஆலிவ் எண்ணெய் உள்ளது. இது தோலை மென்மையான, மிருதுவான மற்றும் பளபளப்பாக மாற்றும் எண்ணெயாக உள்ளது. இந்த எண்ணெயை பயன்படுத்தினால் உங்களுடைய வயது சற்றே குறைந்து காணப்படுவீர்கள். இந்த எண்ணெயை தலைமுடி பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம்.

    திராட்சை விதை எண்ணெய் (Grapeseed oil)

    எண்ணெயை தடவினால் சருமம் வழுக்கும் என்று நீங்கள் எண்ணினால், கவலையை விடுங்கள். இருக்கவே இருக்கிறது திராட்சை விதை எண்ணெய். இது தோலினால் உடனடியாக கிரகித்துக் கொள்ளப்படும் தன்மையைக் கொண்ட எண்ணெயாகும். உங்கள் தோலை எப்படி மின்னச் செய்வது என்று நீங்கள் யோசித்துக் கொண்டிருந்தால், உடனடியாக திராட்சை விதை எண்ணெயை பயன்படுத்துங்கள்.

    கேரட் வேர் எண்ணெய் (Carrot root oil)

    சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட சருமத்தை குணப்படுத்த கேரட் வேர் எண்ணெய் உதவுகிறது. இது வலியை குணப்படுத்தும் சிகிச்சைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. தலைமுடி பராமரிப்புக்கும் பயன்படுத்தப்பட்டு, உங்கள் முடியை கட்டுப்பாட்டுடன் வைக்கவும் இந்த எண்ணெய் உதவுகிறது. முயற்சித்துப் பாருங்களேன்!

    0 comments:

    Post a Comment