Saturday, 30 November 2013

Tagged Under: ,

ஆக்டர் அஜித் vs டாக்டர் அஜித்!

By: Unknown On: 10:49
  • Share The Gag
  •  

    '' 'நான் எத்தனையோ படங்கள் நடிச்சிருக்கேன். ஆனா, இந்தப் படத்தோட க்ளைமாக்ஸ் ரொம்ப எமோஷனலா இருக்கு சிவா’னு நாசர் சார் சொன்னார். 'அஜித் சாரை வெச்சு ஆக்ஷன் ப்ளாக் இருக்கும்னு நினைச்சா, இவ்வளவு காமெடி இருக்கே’னு ஒளிப்பதிவாளர் வெற்றி ஆச்சர்யப்பட்டார். மேக்கிங்லயே 'வீரம்’ இவ்வளவு பாராட்டுக்களை வாங்கினது சந்தோஷமா இருக்கு!''  - அஜித்தின் அடுத்த படப் பரபரப்பைப் பற்ற வைக்கிறார் 'வீரம்’ இயக்குநர் சிவா.





    '' 'வீரம்’ படத் தயாரிப்பாளர் வெங்கட்ராமரெட்டியை முதன்முதலா சந்திச்சப்போ, 'எம்.ஜி.ஆருக்கு 'எங்க வீட்டுப் பிள்ளை’ மாதிரி அஜித்துக்கு இந்தப் படம் இருக்கணும். குழந்தைகள்ல இருந்து தாத்தா பாட்டிகள் வரை எல்லாரையும் தியேட்டருக்குக் கொண்டுவந்து நிறுத்தணும்’னு சொன்னார். இதுபத்தி அஜித் சார்கிட்ட பேசினப்போ, 'அப்போ கிராமத்துக் கதையா ரெடி பண்ணுங்க சிவா’னு சொன்னார். மாமன், மச்சான், அண்ணன், தம்பி, அங்காளி, பங்காளினு எப்பவும் 'குட் ஃபீல்’ கொடுக்கிற குடும்ப உறவுக் கதைக்குள், அஜித்துக்குனு ஒரு கேரக்டரைப் புகுத்தினோம். அட்டகாசமான திரைக்கதை செட்டாச்சு. இந்த 'வீரம்’, வீட்டுச் சாப்பாடுனா... சாம்பார், ரசம், கூட்டு பொரியல்னு இல்லை... வெடக்கோழிக் குழம்பு, வஞ்சிரம் மீன், மட்டன் மசாலானு காரசாரமான வீட்டுச் சாப்பாடு!''




    '' 'இந்தப் படத்தில் அஜித் ஸ்பெஷல் என்ன?''

    ''ஒண்ணே ஒண்ணுதான்... 'பன்ச் டயலாக் வேணாம் சிவா’னு அன்பா சொல்லிட்டார். ஏகப்பட்ட பன்ச் பிடிச்சு வெச்சிருந்தோம். ஆனா, அவர் இப்படிச் சொல்லிட்டாரேனு தவிர்த்துட்டோம். சாதாரணக் கிராமத்து மனுஷன் 'வினாயகம்’ கேரக்டர் அஜித்துக்கு.  வேட்டியை மடிச்சுக் கட்டினா, விளையாட்டுதான்.


    ஸ்க்ரீனுக்குப் பின்னாடி அஜித் கலகலப்பா இருப்பார்.  தானும் சிரிச்சு, மத்தவங்களையும் சிரிக்க வெச்சுட்டே இருப்பார். 'சார் உங்களோட இந்தக் காமெடி முகத்தை நான் ஸ்க்ரீன்ல காட்டப் போறேன்’னு சொன்னேன். 'நல்லாவா இருக்கும்?’னு அப்பாவியாக் கேட்டார். 'அடி பின்னும்’னு சொன்னேன். சின்னதா சிரிச்சுக்கிட்டார். அஜித் சார்கூட சந்தானம், தம்பி ராமைய்யா கூட்டணி. 


    ரொம்ப தன்மையா இருக்கார். ஸ்விட்சர்லாந்துல ஷூட்டிங். அங்கே லைட் எஃபெக்ட் எல்லாருக்கும் அலர்ஜியை உண்டாக்கி, கண்களைச் சிவக்கவெச்சிருச்சு. தவிச்சுப்போயிட்டோம். மறுநாள் காலையில எல்லார் ரூமுக்கும் அஜித் சாரே போய் எல்லார் கண்லயும் மருந்து போட்டுவிட்டார். எல்லாரும் அப்படியே மெல்ட் ஆகிட்டோம். 'சார் உங்களை ஆக்டர் அஜித் குமார்னு நினைச்சேன். ஆனா, இப்பத்தான் தெரியுது நீங்க டாக்டர் அஜித் குமார்’னு, அப்போ ஜோக் அடிச்சேன். கலகலனு வெள்ளந்தியாச் சிரிச்சார். இவ்வளவு ஈஸியான மனுஷன்கூட தொடர்ந்து வேலை பார்க்கணும்னு ஆசை வரும்தானே!''

    0 comments:

    Post a Comment