Thursday, 14 November 2013

Tagged Under: , , ,

செல்வாக்கான இளைஞர் பட்டியலில் மலாலா, ஒபாமா மகள் தேர்வு!

By: Unknown On: 18:08
  • Share The Gag


  • நியூயார்க்கில் இருந்து வெளிவரும் டைம் இதழ் 2013ம் ஆண்டின் செல்வாக்கு மிகுந்த 16 இளைஞர்கள் பட்டியலை கடந்த செவ்வாய் கிழமை வெளியிட்டுள்ளது.


     இந்த பட்டியலில் ஒபாமா வின் மகள் மாலியா (15), பாகிஸ்தானை சேர்ந்த மலாலா (16) மற்றும் சமூக சேவை, இசை, விளையாட்டு, தொழில்துறை விஞ்ஞானம், அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் இளைஞர்கள்  இடம்பெற்றுள்ளனர்.


    அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மூத்த மகள் மாலியாவின் பேச்சு மற்றும் செயல்பாடு கள் பெரியவர்களின் செயல்பாட்டுக்கு ஒப்பாக அமைந்துள்ளது என்று டைம்ஸ் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.


    மலாலாவை பற்றி கூறுகையில், பாகிஸ்தானில் பெண் கல்விக்காக போராடியவர், தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு பயப்படாமல் எதிர்த்து நின்று குரல் கொடுத்தவர் என்று குறிப்பிட்டுள்ளது.


    இதைத்தவிர பாடகர்கள் லார்டு (17), ஜஸ்டின் பைபர் (19), ஒலிம்பிக் நீச்சல் வீரர் மிஸ்ஸி பிராங்க்ளின் (19) உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் இளைஞர்கள் பெயர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

    0 comments:

    Post a Comment