Thursday, 14 November 2013

Tagged Under: , ,

தூக்கமின்மை சரியாக!

By: Unknown On: 21:57
  • Share The Gag

  •  
     
    *தூக்கமின்மை சரியாக

    சிலபேரு தூக்கமில்லாம தவிச்சிக்கிட்டே இருப்பாங்க. ஜாதிக்காயை பொடி பண்ணி, தினமும் காலையில ஒரு சிட்டிகை அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால்.. சும்மா கும்முனு சொக்கிக்கிட்டுத் தூக்கம் வரும்.

    *மனநலக் கோளாறு விலக

    கீழாநெல்லினதும் மஞ்சகாமலைக்கு மருந்தெனத் தோன்றும். ஆனால், மனநலக்கோளாறை சரி பண்ற சக்தியும் அதுக்கு இருக்கு என்பது ஆச்சர்யம் தானே! கீழாநெல்லி சமூலத்தை (இலை, வேர், பூ, காய் என செடி முழுக்க) கல் உரல்ல போட்டு (ஒரு கைப்பிடி அளவு), தண்ணி விட்டு மை மாதிரி அரைக்கணும். தொடக்கநிலை மனநலக் கோளாறு உள்ளவங்களோட தலையில், காலை நேரத்தில் இதைப் பூசணும்.
     
     
     இரண்டரை மணியில் இருந்து மூணு மணி நேரம் கழித்து, தலைக்குக் குளிக்கணும். இப்படி பதினைந்து நாளைக்கு ஒரு தடவை ச்எய்தால், நல்ல குணம் கிடைக்கும். மொத்தம் ரெண்டு இல்லனா மூணு தடவை செய்தாலே போதும். இதே மாதிரி ‘நல்லவேளை இலை’யை கல் உரலில் போட்டு மையாக அரைத்து தலையில் பூசி, இரண்டரை மணியில் இருந்து மூணூ மணி நேரம் கழித்து தலைக்குக் குளித்து வந்தாலும் மனநலக் கோளாறு சரியாகும்.

    *நினைவாற்றல் பெருக

    திரிபலாவை (நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய்) கால் ஸ்பூன் எடுத்து தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். இதேமாதிரி கோரைக்கிழங்கை பொடி பண்ணி, அரை ஸ்பூன் எடுத்து, அதோடு தேன் கலந்து சாப்பிட்டு வந்தாலும் நினைவாற்றல் பெருகும். வல்லாரை இலைப்பொடியை கால் ஸ்பூன் அளவு காலையிலயும், சாயங்காலமும் சாப்பிட்டு வந்தாலும் நினைவாற்றல் வரும். 
     
     
     அமுக்கிராங்கிழங்கு சூரணம் இரண்டு ஸ்பூன், பாதாம் பருப்பு நாலு, காய்ந்த திராட்சை ஒரு ஸ்பூன் எடடுத்து, 200 மில்லி பசும்பாலில் போட்டுக் காய்த்து, ஆறினதும் காலையிலயும் சாயங்காலமும் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். 
     
     
    வல்லாரைத்தூள் 10 மடங்கு, வசம்புத்தூள் ஒரு மடங்கு சேர்த்து கலந்து வைத்துவிட வேண்டும். இதில் அரை ஸ்பூன் அளவு தேனில் கலந்து காலை-மாலை என சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் கூடும். இதையெல்லாம் ஒரு மண்டலம் சாப்பிடணும். தேவைப்பட்டால் சிலநாள் இடைவெளி விட்டுத் தொடரலாம்.

    0 comments:

    Post a Comment