Friday, 1 November 2013

Tagged Under:

கமல்! பட வசூலை நேர்மையாக யாரும் சொல்வதில்லை!

By: Unknown On: 09:00
  • Share The Gag
  • சூப்பர் ஹிட் படங்களின் வசூலை சொல்வதில் நேர்மை வேண்டும் என்றார் கமல்ஹாசன்.பெங்களூரில் பேட்டி அளித்தபோது கமல் கூறியது:சினிமாவை பொறுத்தவரை அதன் வசூல் விவரத்தை சொல்வதில் வெளிப்படையான நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். அப்படி இல்லாவிட்டால்  எவ்வளவு பெரிய தொழில் நுட்பமோ அல்லது வெற்றியோ சினிமாவின் வளர்ச்சிக்கு உதவாது. ஒரு நடிகரும் சரி அல்லது தயாரிப்பாளரும் சரி படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் வசூல் என்ன என்பதை வெளிப்படையாகவே சொல்ல வேண்டும்.

    அந்தவகையில் பார்த்தால் ஹாலிவுட் பட வசூலைவிட நமது படங்களின் வசூல்தான் அதிகமாக இருக்கும். நம் நாட்டில் 100 கோடி சினிமா ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் 10 சதவீதம்பேர் சூப்பர் ஹிட் படம் பார்த்தால்கூட இன்றைய விலை நிலவரத்தில் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் இருக்கும். ஆனாலும் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் வசூலை யாருமே சொல்வதில்லை.இவ்வாறு கமல் கூறி உள்ளார்.

    0 comments:

    Post a Comment