Friday, 1 November 2013

Tagged Under:

சன் டைரக்ட் தீபாவளி சிறப்பு சலுகை!

By: Unknown On: 08:48
  • Share The Gag

  • டிடீஹெச் சேவை பிரிவில் முதன்மை நிறுவனமாக திகழும் சன் டைரக்ட், பண்டிகை காலத்துக்காக சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. புதிய இணைப்புகளை பெறுபவர்களுக்கும் கவர்ச்சிகரமான சலுகைகளின் தொகுப்பையும் சன் டைரக்ட் வழங்குகிறது.
    சிறப்பு சலுகைகள்:

    * சினிமா ப்ளஸ் ஸ்போர்ட் பேக் , கட்டணம் ரூ.1890 செலுத்தும்போது 2 மாத சந்தா இலவசம், ரூ.2,290 செலுத்தும் போது 5 மாத சந்தா இலவசம்.
    * வேர்ல்டு பேக் , கட்டணம் ரூ.2,090க்கு 2 மாத சந்தா இலவசம், ரூ.3,190க்கு 7 மாத சந்தா இலவசம்.
    * மெகா பேக் , கட்டணம் ரூ.2,090க்கு 2 மாத சந்தா இலவசம், ரூ.3,490க்கு 7 மாத சந்தா இலவசம்.
    ரூ.155ல் தொடங்கி ரூ.300 வரையிலான திட்டங்களை கொண்டிருப்பதால் ஒவ்வொருவருக்கும் ஏற்ற திட்டத்தை சன் டைரக்ட் தருகிறது.

    இதன்படி, சன் டைரக்டில் சவுத் வேல்யு பேக் ரூ.155க்கும் (போட்டியாளர்களின் கட்டணம் ரூ.170), சவுத் சினிமா ப்ளஸ் ஸ்போர்ட்ஸ் ரூ.185க்கும் (போட்டியாளர் கட்டணம் ரூ.190,ரூ.200), வேர்ல்டு பேக் ரூ.220க்கும் (போட்டியாளர் கட்டணம் ரூ.300,ரூ.340), மெகா பேக் ரூ.300க்கும் (போட்டியாளர் கட்டணம் ரூ.400 முதல் ரூ.430) கிடைக்கிறது.
    சினிமா ப்ளஸ் ஸ்போர்ட்ஸ் தொகுப்பில், ஸ்டார் கிரிக்கெட், ஈஎஸ்பிஎன், ஸ்டார் ஸ்போர் ட்ஸ் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 என 4 புதிய பிரபல ஸ்போர்ட்ஸ் சேனல்களையும், விளம்பரங்கள் இல்லாத 8 திரைப்பட சேனல்களையும் வழங்குகிறது.

    ஆங்கில திரைப் படங்கள், தகவல், பொழுதுபோக்கு மற்றும் செய்திகள் ஆகியவற்றின் மிக நேர்த்தியான கலவையை வேர்ல்டு பேக் வழங்குகிறது. சன் டைரக்ட் தளத்தின் கீழ் அனைத்து பிரிவுகளிலும் கிடைக்கக்கூடிய 190க்கும் மேற்பட்ட சேனல்கள்  மெகா பேக் வழங்குகிறது.

    சலுகை திட்டங்களை அறிவித்து சன் டைரக்ட் நிறுவனத் தின் மேலாண்மை இயக்குநர் மகேஷ்குமார் பேசுகையில், ‘‘இந்த பண்டிகை காலத்தில் இத்தகைய மதிப்புமிக்க சலுகை திட்டங்களின் மூலம், வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியில் பங்குகொள்ள எங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது’’ என்றார்.

    0 comments:

    Post a Comment