Sunday, 17 November 2013

Tagged Under: , , ,

ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டத்தை கைவிட சீனா முடிவு!

By: Unknown On: 00:59
  • Share The Gag

  • கடந்த 43 ஆண்டுகளாக இருந்து வந்த, ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டத்தை கைவிட சீன அரசு முடிவு செய்துள்ளது. இதனால் சீனத் தம்பதிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உலக மக்கள் தொகை யில் முதல் இடத்தில் உள்ளது சீனா. கடந்த ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சீனாவில் 18.5 கோடி பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாக உள்ளனர்.


    2015ல் முதியவர்கள் எண்ணிக்கை 22.1 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5.1 கோடி முதியவர்கள் கவனிக்க ஆள் இல்லாமல் வறுமையில் வாடுகிறார்கள். மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனாவில் கடந்த 1970 முதல் ஒரு குழந்தை குடும்ப கட்டுப்பாடு திட்டம் கொண்டு வரப்பட்டது. கிராமப்புறங்களில் தம்பதிக்கு பிறகும் முதல் குழந்தை பெண்ணாக இருந்தால் 2வது குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அதன் பிறகு கிராமப்புற, நகர்புறம் இரண்டிலும் ஒரு குழந்தைக்கு மேல் யாரும் பெற்று கொள்ள கூடாது என்று தடை விதிக்கப்பட்டது.


    தற்போது முதியவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் ஒரு குழந்தை திட்டத்தை கைவிட அரசு முடிவு செய்துள்ளது. சீனாவில் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் பார்டியின் 18 வது மத்திய குழு கூட்டம் கடந்த 9ம் தேதி துவங்கி நான்கு நாட்கள் நடந்தது. இதில் 376 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


    அவர்கள் ஒரு குழந்தை திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.இதை தொடர்ந்து சீனா வில் நடைமுறையில் உள்ள ஒரு குழந்தை திட்டம் தளத்தப்படுவதாகவும், தம்பதி 2 குழந்தைகள் பெற்று கொள்ள அனுமதி வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சீன மக்கள் அமோக வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    0 comments:

    Post a Comment