Friday, 6 December 2013

Tagged Under: ,

உலகின் கவர்ச்சியான ஆசியப் பெண் நடிகை கத்ரினா கைஃப்: 4–வது முறையாக தேர்வு!

By: Unknown On: 20:04
  • Share The Gag


  • பிரபல இந்தி நடிகை கத்ரினா கைஃப். இவரை உலகிலேயே கவர்ச்சியான ஆசிய பெண் என லண்டனில் இருந்து வெளிவரும் வார பத்திரிகை ஒன்று தேர்வு செய்துள்ளது.


    நடிகை பிரியங்கா சோப்ரா, டி.வி. நடிகை திரஷ்டிதாமி, தீபிகா படுகோனே உள்ளிட்ட நடிகைகள் மாடல் அழகிகள் என 50 பேர் பெயர் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இவர்களில் கத்ரினா கைஃப் அதிக வாசகர்கள் ஆதரவுடன் முதல் இடம் பிடித்தார். அவர் இந்தப் பட்டத்தை தொடர்ந்து 4–வது முறையாக தட்டிச் சென்றுள்ளார். கத்ரினா கைஃப் கடந்த ஒரு ஆண்டாக எந்த சினிமாவிலும் நடிக்கவில்லை. விளம்பர படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.


    சமீப காலமாக பிரபல நடிகர் ரிஷிகபூரின் மகன் ரன்பீர் கபூருடன் கத்ரினா கைஃப் இணைத்து பேசப்பட்டு வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் மும்பை சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.


    கவர்ச்சியான ஆசிய பெண்கள் வரிசையில் நடிகை பிரியங்கா சோப்ரா 2–வது இடத்தையும், டி.வி. நடிகை தாமி 3–வது இடத்தையும் பிடித்தனர். நடிகை தீபிகா படுகோனேக்கு 4–வது இடம்தான் கிடைத்தது.


    மற்ற வரிசையில் உள்ள நடிகைகள் விவரம்:– சோனம்கபூர் (5), பரிநீதி சோப்ரா (14), ஷோபிசவுத்ரி (21), மெக்ரன் சயத் (22), சுனிதி சவுகான் (28), அங்கிதா லோகன்டே (29), ஹீனாகான்(31), ஸ்ரேயா கோசல் (43).

    0 comments:

    Post a Comment