Friday, 6 December 2013

Tagged Under: ,

மரணத்துக்கு முன் வெளியான மண்டேலா சினிமா படம் வசூலை வாரி குவித்தது!

By: Unknown On: 18:31
  • Share The Gag



  • தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா கருப்பர்களின் உரிமைக்காக நிறவெறி போராட்டத்தில் ஈடுபட்டார். அதற்காக 27 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார். அவரது வாழ்க்கை வரலாற்றை தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளி இயக்குனர் ஆனந்த்சிங் சினிமா படமாக தயாரித்துள்ளார். இதற்காக அவர் நெல்சன் மண்டேலாவுடன் 20 ஆண்டுகள் கழித்துள்ளார்.


    சுதந்திரத்துக்காக மண்டேலாவின் நீண்ட பயணம் என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் மண்டேலா மரணம் அடைவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு தென் ஆப்பிரிக்காவில் ரிலீஸ் ஆனது. இது ரிலீஸ் ஆன ஒரு வாரத்தில் வசூலை வாரி குவித்தது. பாக்ஸ் ஆபீஸ் ஹிட் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. முதல் வாரத்தில் மட்டும் ரூ.2 கோடியே 60 லட்சம் (4 லட்சத்து 23 ஆயிரம் டாலர்) வசூல் ஈட்டியுள்ளது. இந்த படம் பல நாடுகளில் தலைவர்களுக்கு விசேஷமாக திரையிட்டு காண்பிக்கப்பட்டது.


    அமெரிக்க அதிபர் பராக் ஓபாமாவுக்கு வெள்ளை மாளிகையில் திரையிடப்பட்டது. லண்டனில் நடந்த சிறப்பு காட்சியில் இங்கிலாந்து இளவரசர் வில்லியம், இளவரசி கேத்மிடில்டன், மண்டேலாவின் மகள், ஷிண்ட்ஷி மண்டேலா ஆகியோர் பங்கேற்றனர். மண்டேலா மரணம் குறித்து அவரது வாழ்க் கையை சினிமா படமாக எடுத்த ஆனந்த்சிங் கூறும்போது ‘‘நாங்கள் எங்களது தந்தையை இழந்து விட்டோம்’ அவர் உலகின் ‘ஹீரோ’ ஆக திகழ்ந்தார்’’ என தெரிவித்துள்ளார்.

    0 comments:

    Post a Comment