Wednesday, 4 December 2013

Tagged Under: , , ,

நல்லெண்ணையின் மகத்துவங்கள்...!

By: Unknown On: 21:04
  • Share The Gag



  • அனைவரும் ஆலிவ் எண்ணெயில் மட்டும் தான் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன என்று நினைக்கிறோம்.

    ஆனால் நல்லெண்ணெயிலும் அதிகளவு சத்துக்கள் அடங்கியுள்ளது.

    மேலும் இந்த எண்ணெய் சைவ உணவாளர்களுக்கு மிகச் சிறந்த ஒரு உணவுப் பொருள்.

    ஏனெனில் இந்த எண்ணெயில், முட்டையில் நிறைந்துள்ள புரோட்டீனுக்கு நிகரான அளவில் புரோட்டீனானது நிறைந்துள்ளது.

    ஆரோக்கிய இதயம்


    நல்லெண்ணெயில் சீசேமோல் என்னும் பொருள் நிறைந்துள்ளது. எனவே இதனை உணவில் அதிகம் சேர்க்கும் போது, அது இதயத்திற்கு சரியான பாதுகாப்பு அளித்து, இதய நோய் வராமல் தடுக்கிறது.

    நீரிழிவு

    நல்லெண்ணெயில் உள்ள அதிகப்படியான மக்னீசியம், இன்சுலின் சுரப்பை தடுக்கும் பொருளை எதிர்த்து போராடி உடலில் நீரிழிவு வருவதைத் தடுக்கும்.

    வலுவான எலும்புகள்

    நல்லெண்ணெயில் ஜிங்க் என்னும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்து கொள்ளும்.

    எனவே எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில், கால்சியம் உணவுகளுடன், நல்லெண்ணெயையும் சாப்பிடுவது நல்லது.

    அதிலும் இந்த எண்ணெயை பெண்கள் அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

    செரிமான பிரச்சனை

    மற்ற எண்ணெய்களான கடுகு மற்றும் தேங்காய எண்ணெயை விட, நல்லெண்ணெய் மிகவும் லேசாக இருப்பதால் இதனை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, குடலியக்கமானது சீராக செயல்பட்டு செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும்.

    இரத்த அழுத்தம்

    நல்லெண்ணெயில் இருக்கும் மக்னீசியம், இரத்த அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

    அதிலும் நீரிரிவு நோயாளிகளுக்கு, உயர் இரத்த அழுத்தம் இருந்தால் அவர்கள் நல்லெண்ணெயை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.

    பளிச் பற்கள்

     
    தினமும் காலையில் எழுந்து நல்லெண்ணெயால் வாயை கொப்பளித்தால், பற்களில் தங்கியிருக்கும் சொத்தைகள் நீங்குவதோடு, பற்கள் நன்கு பளிச்சென்று ஆரோக்கியமாக இருக்கும்.

    அழகான சருமம்

    நல்லெண்ணெயில் நிறைந்துள்ள ஜிங்க் சத்தால், சருமத்தின் நெகிழ்வுத் தன்மை அதிகரித்து, சருமத்தில் கொலாஜெனின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

    0 comments:

    Post a Comment