Wednesday, 4 December 2013

Tagged Under: , , , ,

நடைப்பயிற்சி அணி!

By: Unknown On: 22:32
  • Share The Gag
  • காலை விடிந்ததும், 50 வயதுள்ள என் அத்தை, அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தார். நான், என்னவென்று விசாரித்த போது, "வாக்கிங்' செல்வதாக சொன்னார். நான் அதை கண்டுகொள்ளாமல், "சரி போய்ட்டு வாங்க...' என்று கூறி, உள்ளே சென்று விட்டேன்.

    வாக்கிங் செல்வதாக கூறிக் கிளம்பிய அத்தை, வாசலிலேயே, 10 நிமிடம் நிற்க, "என்ன அத்தே... இன்னும் இங்க நின்னுக்கிட்டு இருக்கீங்க?' என்றேன். அதற்கு அத்தை என்னிடம், "எங்க டீம் வருவாங்க, அவங்களோடு சேர்ந்துதான் போவேன்...' என்றார். "அது என்ன... டீம்?' என்று கேட்டேன்.


    அவர் கூறியது: தன்னந்தனியாக, "வாக்கிங்' போறப்போ, சிலர் வேகமாகவும், சிலர் மெதுவாகவும் நடப்பாங்க. ஒரு சிலர், "வாக்கிங்' பற்றிய, முறை தெரியாம இருப்பாங்க. ஆனால், குழுவா சேர்ந்து, "வாக்கிங்' போனா ஒரே சீரா நடப்போம்; சிரமம் தெரியாது. அதோட நகை திருடர்கள், நாய் தொல்லை, எதுவும் கிடையாது. திரும்பி வரும் போது, பால் பாக்கெட், பேப்பர் வாங்கிட்டு வருவோம். அதோட பலரோடு பழகும் வாய்ப்பும் நமக்கு கிடைக்கும்...' என்றார்.


    தனியாக மைதானத்திற்கோ, மாடியிலோ, "வாக்கிங்' செல்வதை விட, இதுபோன்று தெருவாசிகளோடு, ஓர் அணியாக, "வாக்கிங்' செல்வது புதுமையாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும். உங்கள் பகுதியிலும் இதுபோல சிலர் இணைந்து செயல்படலாமே!

    0 comments:

    Post a Comment