Sunday, 15 December 2013

Tagged Under: , , , ,

பொருளாதாரத்தை மேம்படுத்துவது எப்படி?

By: Unknown On: 09:51
  • Share The Gag


  • பணக்காரனாக ஆக வேண்டும் என்றால், அது எப்படி சாத்தியாகும் என்பதை ஒரு பணக்காரரிடமிருந்தோ அல்லது பல பணக்காரர்களைப் பற்றிய நூல்களிலிருந்தோ அல்லது அவர்கள் பின்பற்றிய வழிமுறைகளை அறிந்தோ நாமும் பணக்காரனாக ஆகிவிடலாம்.


     இதனை ஒரு பணக்காரரிடமிருந்து நேரடியாக கேட்டும் தெரிந்து கொண்டால் தவறில்லை. ஐந்தாயிரம் கோடிக்கும் மேல் மதிப்புள்ள சொத்துக்களை குவித்துள்ள ஜே. பால் கெட்டி என்கிற கோடீஸ்வரரின் ஆலோசனைகளை நாம் இங்கு அறிவோம்.


    ஒரு பேட்டியில் அவரிடம் ஒரு கேள்வி கேட்க்கப்பட்டது. “தங்களுடைய வெற்றியின் ரகசியம் என்ன?”. கோடிக்கணக்கான பணம் சம்பாதித்ததை மூன்று வார்த்தையில் ரகசியமாக அவர் குறிப்பிட்டார்.


    “இன்னும் கடினமாக முயற்சி செய்”.  அது தான் அவர் சொன்னது. “இன்னும் கடினமாக முயற்சி செய்” மிக எளிமையானதாக தோன்றுகிறது. ஆனால் அதைப்பற்றி தீர்க்கமாக சிந்தித்து முடிவுக்கு வர வேண்டும்.


    முதலில் கடினமாக முயற்சி செய்யுங்கள்… பிறகு அதைவிட கடினமாக முயற்சி செய்யுங்கள்… பிறகு அதைவிட இன்னும் கடினமாக முயற்சி செய்யுங்கள். இவ்வாறு மேலும் மேலும் முயற்சிக்கின்ற போது, “முயற்சி கூடுவதைப் போலவே, முயற்சியின் பலனும் கூடிக்கொண்டே போகும்”.


    கூட்டுவட்டி எவ்வாறு அதிவேகமாகப் பெருகிக் கொண்டே போகிறதோ, அதைப் போலவே தொடர்ந்து செய்யப்படும் முயற்சியின் பலன்களும் அதிவிரைவில் அதிகரித்துக் கொண்டே போகும். உங்கள் முயற்சி கோபுரம் போல் உயரும் போது லாபமும் கோபுரம் போல உயரத் தொடங்குகிறது. இலாபத்தின் வேகம் அதிகரிக்கும் போது நமது பொருளாதாரமும் உயர்ந்து கொண்டே செல்லும்.


     “இன்னும் கடினமாக முயற்சி செய்”

    0 comments:

    Post a Comment