Sunday, 15 December 2013

Tagged Under: , , , , ,

பிறந்த குழந்தையுடன் பயணிக்கும் போது தெரிந்து கொள்ள வேண்டியவை...

By: Unknown On: 15:04
  • Share The Gag


  • குழந்தைகள் எப்போதுமே வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதில்லை. அவர்களுடன் அவ்வப்போது கவனமாகவும், பாதுகாப்புடனும் வெளியே செல்ல வேண்டும். உதாரணமாக, குழந்தை பிறந்ததும், அவர்களுடன் வெளியே செல்ல நினைக்கும் போது, காரில் செல்வது நல்லது. அதற்காக எங்கு சென்றாலும் காரில் செல்ல வேண்டும் என்பது பற்றி பேசவரவில்லை. அவ்வாறு வெளியே நீண்ட தூரம் பயணம் செய்வது நல்லதா கெட்டதா என்பது பற்றியது தான். ஆனால் குழந்தை பிறந்த பின்னர் தாயும், சேயும் 40 நாட்கள் வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் தான் பிரசவத்தின் போது ஏற்படும் உள்காயங்கள் அனைத்தும் குணமாகும். மேலும் இந்த நாட்களில் குழந்தைகளை எளிதில் நோய்கள் தாக்கும்.


    * பயணத்தின்போது முடிந்தவரை தாயிடமே குழந்தையை விடுங்கள். அதிக இரைச்சல் குழந்தைக்கு இனம் புரியாத பயத்தை ஏற்படுத்தி, தொடர்ச்சியாக அழவைக்கும். தாயின் அரவணைப்பு குழந்தைக்கு புத்துணர்வு தரும்.

    * வெளியில் வாங்கும் உணவுகளை குழந்தைக்குக் கொடுக்கும் விசப் பருட்சையைக் கைவிடுங்கள் (அவசர நிலைமை தவிர). சுகாதாரமற்ற இந்த காலச் சூழலுக்குப் பொருந்தாது.


    *கொசுக்கடி, விஷக் கடி, எறும்பு முதலியவை கடித்தால் முதலில் உடைகளைக் கழற்றி, காற்றோட்டம் உள்ள இடத்திற்கு குழந்தையை கொண்டு செல்லுங்கள். உடைகளை கட்டாயம் மாற்றுங்கள்.


    *முடிந்தவரை குழந்தை வளர்ப்பில் அனுபவம் உள்ள பெரியவர்கள் உடனிருப்பதே நல்லது.


    *காலநிலைக்கு ஏற்ற உடைகளை குழந்தைக்கு தேர்ந்தெடுங்கள். மற்றவர் பார்வைக்காகவும், உங்கள் வசதி வாய்ப்பையும் உடையில் காட்டுவது நல்ல தாய்க்கு அழகல்ல.


    *ஆபரணங்களை அறவே தவிர்த்து விடுங்கள். ஆபரணங்கள் உங்கள் குழந்தைக்கு எமனாகும்.

    * எந்த சூழ்நிலையிலும் தைரியம் அவசியம். அதற்காக முரட்டுத்தனம் கூடாது.


    * கனமற்ற, மிகத் தேவையான உடைமைகளை மட்டும் கொண்டு செல்லுங்கள். உணவு, உடை என பிரித்து தனித் தனியாக வைத்திக்கொள்ளுங்கள். அவசரநேரங்களில் தேடுவதையும், மொத்த சுமையை தலைகீழாக புரட்டிப்போடுவதையும் தவிர்க்கலாம்.

    * கார் அல்லது பஸ் பயணம் செய்வதாக இருந்தால், குழந்தைகளுக்கான பேபி கார் ஷீட் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் நீண்ட தூரம் பயணம் செய்யும் போது மடியில் வைத்துக் கொண்டு சென்றால், திடீரென்று ப்ரேக் போடும் போது குழந்தை வழுக்கி விழக் கூட வாய்ப்புள்ளது.

    * குழந்தையின் மேல் சூரியனின் கதிர்கள் நேரடியாக படும்படி வைத்துக் கொள்ள வேண்டாம். அது குழந்தையின் சருமம் மற்றும் கண்ணிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் சூரியக் கதிர்கள் பட்டால், அது குழந்தையின் உடலில் வறட்சியை உண்டாக்கிவிடும். அதற்காக குழந்தையை ஏசி இருக்கும் இடத்திற்கு நேராகவும் வைக்க கூடாது. அது குழந்தைக்கு இருமல் அல்லது சளி போன்றவற்றை ஏற்படுத்திவிடும்.

    * குழந்தை பிறந்தவுடன் விமானத்தில் பயணம் செய்வதற்கு, விமான நிறுவனங்களில் ஒருசில குறிப்பீடுகள் உள்ளன. அவை குழந்தை பிறந்து குறைந்தது 2 வாரங்களாவது இருக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு விமானத்தின் குறிப்பீடுகளும் வேறுபடும். எனவே அதனை தெரிந்து கொள்ள வேண்டும்.

    * குழந்தை குறைப்பிரசவத்தில் பிறந்தாலோ அல்லது பிறவியிலேயே ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அதனை விமானத்தில் பயணம் செய்வதற்கு முன்பே, விமான நிறுவனங்களிடம் தெரிவிக்க வேண்டும்.

    * பிறந்த குழந்தையுடன் விமானத்தில் பயணம் செய்யும் போது, செய்ய வேண்டியவற்றில் முக்கியமானவை காதுகளில் காற்று புகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் விமானத்தில் பயணம் செய்யும் போது குழந்தையின் காதுகளில் அழுத்தமானது அதிகரித்து, காதுகளில் வலியை உண்டாக்கிவிடும். எனவே இவற்றில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

    * ரயிலில் பயணம் செய்வதென்றால், அப்போது எந்த ஒரு குறிப்பீடுகளும் இல்லை.

    0 comments:

    Post a Comment