ஆனால் டீஸரை பார்த்த அனைவரும் இது நிஜாம் பாக்கு விளம்பரத்தின் காப்பி என்று கண்டு பிடித்து விட்டனர். இதனால் கோபம் அடைந்த கமல்ஹாசன், ரமேஷ் அரவிந்திடம் உத்தம வில்லன் டீஸரை வாபஸ் வாங்கும்படி சொல்லியிருக்கிறார்.
கமல்ஹாசன் கேட்டதற்கு இணங்க, ரமேஷ் அரவிந்தும் டீஸரை வாபஸ் பெற்றுவிட்டார்.
உத்தம வில்லன் டிரைலரை திருப்திகரமாக எடுக்கவில்லை என்று கமல்ஹாசன், ரமேஷ் அரவிந்திடம் கூறியதாக தெரிகிறது.
அதேபோல் டிரைலரை தயாரித்த படக்குழுவினருக்கும் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதனால் டீஸரை தயாரிக்கும் பணியில் கமல்ஹாசனே தற்போது ஈடுபட்டுள்ளார். இன்னும் ஒரு சில தினங்களில் கமல் மேற்பார்வையில் தயாரித்த உத்தம வில்லன் படத்தின் டீஸர் வெளியாகும் என கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment