Friday, 29 August 2014

Tagged Under:

ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்ற பழமொழியின் விளக்கம் தெரியுமா?

By: Unknown On: 10:25
  • Share The Gag
  •  அனைவருக்கும் ஆறிலும் சாவு, நூறிலும் சாவு என்ற ஒரு பழமொழி பற்றி தெரியும். ஆனால் இந்த பழமொழி எதற்காக எப்பொழுது முதன் முதலில் சொல்லப்பட்டது இதன் உண்மையான விளக்கம் என்ன என்று தெரியுமா?

              குருசேத்திர போரில் போருக்கு முன்னதாக தனது மூத்த பிள்ளை கர்ணன் என்பதை அறிந்த குந்திதேவி அவனிடம் சென்று பாண்டவர் ஐவருடன் சேர்ந்து கவுரவர்களை எதிர்த்து போரிட அழைக்கிறார். அப்போது கர்ணன், தனது தா‌ய் கு‌ந்‌திதே‌வி‌க்கு ப‌திலுரை அ‌ளி‌க்‌கிறா‌ர்.

           அ‌தி‌ல், தாயே நான் பாண்டவர் ஐவருடன் சேர்ந்து ஆறாவது ஆளாக போரிட்டாலும் சரி, கவுரவர்கள் நூறு பேருடன் சேர்ந்து போரிட்டாலும் சரி, இறப்பது உறுதி என்பது எனக்குத் தெரியும்.

         ஆகவே, ஆறிலும் சாவுதா‌ன், அ‌ப்படி இ‌ல்லா‌வி‌ட்டாலு‌ம் நூறிலும் சாவுதா‌ன். எப்படி செத்தால் என்ன? அத‌ற்கு செஞ்சோற்றுக் கடன் கழிக்க என்னை வளர்த்து ஆளாக்கிய எனது நண்பன் துரியோதனனிடமே இருந்து உயிரை விடுகிறேன் என்கிறான் கர்ணன்.

           இவ்வாறு கர்ணன் கூறியது தான் இந்த பழமொழிக்கு உண்மையான பொருள். இத்தகைய கர்ணனை தான் கொடைத் தன்மைக்கு மட்டுமல்லாது நல்ல நட்பிற்கும் எடுத்துக்காட்டாக குறிப்பிடுகிறோம்.

    0 comments:

    Post a Comment