Tuesday, 26 August 2014

Tagged Under: ,

கத்தி டீல் முடிந்து விட்டது! விஜய்-முருகதாஸ் அதிர்ச்சி!!

By: Unknown On: 08:23
  • Share The Gag
  • ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கத்தி படத்திற்கான பிரச்னை தீர்ந்த பாடில்லை. நாளுக்கு நாள் பிரச்னை சூடு பிடித்துக்கொண்டே செல்கிறது. அதனால் படம் தீபாவளிக்கு வெளியாகிற நேரத்தில் விசயம் இன்னும் பெரிதாகி விடுமோ என்ற அச்சம் விஜய், முருகதாசுக்கிடையே ஏற்பட்டிருக்கிறது.

    அதனால் இந்த பிரச்னைக்கு இப்போதே முற்றுப்புள்ளி வைத்து விட வேண்டும் என்று யோசித்த அவர்கள், இப்போது கத்திக்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்புக்கு ஒரே காரணம் லைக்கா நிறுவனம்தான். மற்றபடி எந்தவித எதிர்ப்பும் இல்லை. அதனால் கத்தி படத்தை லைக்காவிடமிருந்து வாங்கி முருகதாஸின் பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் மூலம் வெளியிடலாம் என்று முடிவெடுத்தார்களாம்.

    ஆனால் இந்த விசயத்தை அவர்கள் லைக்காவுக்கு கொண்டு சென்றபோது, அவர்களோ, கத்தியை தயாரித்திருப்பது நாங்கள். நீங்கள் அனைவருமே எங்களிடம் சம்பளத்துக்கு வேலை செய்திருக்கிறார்கள். சம்பளத்தையும் வாங்கி விட்டீர்கள். அதனால் உங்களுக்கும், எங்களுக்குமிடையே உள்ள டீல் முடிந்து விட்டது. இனி படத்தை எப்படி எப்போது ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதை நாங்கள்தான் முடிவெடுக்க வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக சொல்லி விட்டார்களாம். அதனால் அவர்களிடம் மேற்கொண்டு எதுவும் பேச முடியாமல் விஜய்-முருகதாஸ் இருவரும் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் சமீபத்தில் வெளியிடப்பட்ட கத்தி படத்தின் புதிய போஸ்டரிலும் லைகா நிறுவனத்தின் பெயருடன் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

    0 comments:

    Post a Comment