Wednesday, 3 September 2014

Tagged Under: ,

ஏன் ஸ்ருதி ஹாசன் இப்படி செய்தார்.....?

By: Unknown On: 07:10
  • Share The Gag
  • கமல்ஹாசனின் மூத்த மகளும், முன்னணி நடிகையுமான ஸ்ருதி ஹாசன், அசை உணவு பிரியர் ஆவார். பல வகையான அசைவ உணவுகளை வெளுத்துக்கட்டும் அவருக்கு, மாட்டு கறி என்றால் மிகவும் பிடிக்குமாம். ஆனால், தற்போது அனைத்து அசைவ உணவுகளுக்கு விடை கொடுத்துவிட்டு, முழுக்க முழுக்க சைவ விரும்பியாக மாறிவிட்டாராம்.

    இது குறித்து ஸ்ருதி ஹாசன் கூறுகையில், “அசைவ உணவுகள் எனக்கு பிடித்தவைகளாக இருந்தன. மாட்டுக்கறி மிகவும் பிடிக்கும். ஜப்பான், துருக்கி உணவு வகைகளையும் விரும்பி சாப்பிடுவேன். ஆனால் இப்போது அவற்றை நிறுத்தி விட்டேன்.

    எனது தந்தை கமல் சைவ உணவுகளை சாப்பிடும்படி வற்புறுத்தினார். சைவ உணவு ஆரோக்கியத்துக்கு நல்லது என்றும் குறிப்பிட்டார். இதையடுத்து அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன். இப்போது முழுமையாக சைவத்துக்கு மாறிவிட்டேன்.” என்று தெரிவித்துள்ளார்.

    0 comments:

    Post a Comment