Wednesday, 3 September 2014

Tagged Under:

பெண்கள் ஆண்களிடம் மறைக்க நினைக்கும் விஷயங்கள் இது தானாம்

By: Unknown On: 23:16
  • Share The Gag
  • ரகசியங்களை காப்பதில் பெண்களை அடித்துக் கொள்ளவே முடியாது. பெண்களின் மனதை புரிந்து கொள்வதென்பது முடியாத காரியமாகவே விளங்குகிறது. இப்போது பெண்கள் என்றுமே வெளிப்படுத்தாத விரும்பாத ரகசியங்கள் பற்றி பார்க்கலாம்.

    ஷாப்பிங் செய்யும் போது பெண்கள் கணக்கில்லாமல் செலவு செய்வார்கள். தங்களுக்கு பிடித்த பொருட்கள் அனைத்தையும் வாங்க முற்படுவார்கள். அதனால் அவர்களின் ஷாப்பிங் செலவை தெரிந்து கொள்ள விரும்பினால், குறிப்பாக திருமணத்திற்கு முன்னால், அதை மறந்து விடுவதே நல்லது.

    பெண்களுக்கு தங்கள் மனம் கவர்ந்த ரகசிய நபர் அவர்களின் நண்பர்கள் வட்டாரம் அல்லது அருகில் இருப்பார். அதனை அவர்கள் கண்டிப்பாக வெளிப்படுத்த மாட்டார்கள். அவர்கள் ஏதாவது ஒரு உறவில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, கண்டிப்பாக அந்த அன்பரை பற்றி வெளியே சொல்லவே மாட்டார்கள்.

    பெண்களின் உரையாடல்களை ஆண்கள் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். நீங்கள் திருமணமான ஆணாக இருந்தாலும் சரி, உங்கள் மனைவி உங்களிடம் அதையெல்லாம் கூறுவார்கள் என எதிர்ப்பார்க்காதீர்கள். என்ன தான் நீங்கள் முயற்சி செய்தாலும் சரி, அதனை கண்டுபிடிக்கவே முடியாது.

    நீங்கள் மற்ற பெண்களிடம் கடலை போடுகிறீர்களா என்பதை கண்டறியும் அதிசயமான உள்ளுணர்வை பெண்கள் கொண்டிருக்கின்றனர். அதனை உங்களிடம் அவர்கள் நேரடியாக கூற மாட்டார்கள். ஆனால் நீங்கள் தானாகவே அவர்களிடம் மாட்டிக் கொள்ளும் நேரம் வரும். எனவே உஷாராக இருங்கள்!

    சில நேரங்களில் வெளிப்படையாக பெண்கள் இதனை காட்டமாட்டார்கள். அதுதான் பொறாமை. பெண்கள் அதிகமாக பொறாமை படுவார்கள். பெண்களை பற்றி ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மற்றொரு ரகசியம் இது.

    0 comments:

    Post a Comment