Thursday, 11 September 2014

Tagged Under:

வெறும் வாயை மெல்லாதீங்க ஏலக்காயை மெல்லுங்க!

By: Unknown On: 23:53
  • Share The Gag
  • சிலர் எப்போது பார்த்தாலும் எதையாவது மென்று கொண்டிருப்பார்கள். சூயிங்கம், சிக்லெட், சாக்லேட் போன்ற எதையாவது வாயில் போட்டு அரைத்துக் கொண்டிருப்பதற்கு பதில்,  ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிடுங்கள். அது நல்லது என்கிறார்கள் டாக்டர்கள்.

    ஏலக்காயில் உள்ள ‘வாலட்டைல்’ என்ற எண்ணெய் வாசனையை தருவதோடு, சில நோய்களையும் குணப்படுத்துகிறது.

    இதில் உள்ள காரக்குணம், வயிற்றுப் பொருமலைக் குணமாக்கி, உணவு எளிதில் செரிமானம் ஆகும்படி தூண்டுகிறது.

    பசியே ஏற்படுவதில்லை, சாப்பிட பிடிக்கவில்லை என்று கூறுபவர்கள், தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால், பசி எடுக்கும். ஜீரண உறுப்புகள் சீராக இயங்கும்.

    நெஞ்சில் சளி கட்டிக் கொண்டு மூச்சு விட சிரமப்படுபவகளும், சளியால் இருமல் வந்து, அடிக்கடி இருமி வயிற்றுவலி வந்தவர்களுக்கும் கூட ஏலக்காய் நல்ல மருந்தாக அமைகிறது. ஏலக்காயை மென்று சாப்பிட்டாலே, குத்திரும்பல், தொடர் இருமல் குறையும்.
    வாய் துர்நாற்றத்தைப் போக்க ஏலக்காயை மென்று சாப்பிட்டு வரலாம்.

    சாப்பிடும் உணவு வகைகளில் சிறிது ஏலக்காயை சேர்த்துக் கொள்வது நல்லது. அதிகமாக சேர்த்துக் கொள்ளக் கூடாது.

    0 comments:

    Post a Comment