Friday, 30 August 2013

Tagged Under: ,

+2 முடித்தவர்களுக்கு ஸ்டெனோகிராபர் பணி வாய்ப்பு!

By: Unknown On: 18:53
  • Share The Gag
  • சி.ஐ.எஸ்.எப் எனப்படும் மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்ப தகுதியான ஆண், பெண் இருபாலர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    பணி: உதவி சப்-இன்ஸ்பெக்டர்(ஸ்டெனோ)

    காலியிடங்கள்
    : 112

    30 vazhikatti  crpf
     
    கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் குறிப்பெடுக்கவும், அதை கணினியில் ஆங்கிலம் அல்லது இந்தியில் நகலெடுக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

    வயதுவரம்பு
    : 25-க்குள் இருத்தல் வேண்டும்.
    தேர்வு செய்யப்படும் முறை: உடற்தகுதி மற்றும் உடற்திறன் தேர்வு, எழுத்துத்தேர்வு, மருத்து பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை குறுக்கீடு செய்யப்பட்ட அஞ்சல் முத்திரையாக செலுத்தப்பட வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் முன்னாள் இராணுவத்தினர், பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

    மேலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.cisf.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

    விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.09.2013

    0 comments:

    Post a Comment