Friday, 30 August 2013

Tagged Under: , ,

பேஸ்புக் மூலம் வேலை தேடுவது எப்படி?

By: Unknown On: 07:43
  • Share The Gag
  • பேஸ்புக் மூலம் நண்பர்களை தேடிக்கொள்ளலாம்.நண்பர்களோடு தொடர்பு கொள்ளலாம்.புகைப்பட‌ங்களையும்,சமீபத்தில் பார்த்த திரைப்படம் பற்றிய விமர்சனத்தையும் பகிர்ந்து கொள்ளலாம்.இன்னும் பலவிதங்களில் இந்த சமுக வலைப்பின்னல் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.இவை எல்லாம் தெரிந்தது தான்.

    பேஸ்புக் சேவையை வேலை வாய்ப்புக்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம் தெரியுமா? ஆம், பேஸ்புக் நட்பு வளர்கவும் ஊர் வம்பு பகிர்ந்து கொள்வதற்கான இடம் மட்டும் அல்ல: அதை பலவிதங்களில் பயனுள்ளதாக பயன்படுத்திக்கொள்ளலாம்.வேலைக்கு வலை வீசவும் தான்!.புதிய வேலை தேடுவதாக இருந்தாலும் சரி ஏற்கனவே பார்த்து கொண்டிருக்கும் வேலையை விட சிறந்த வேலை தேவை என்றாலும் சரி பேஸ்புக் கைகொடுக்கும்.

    சரி,பேஸ்புக் மூலம் வேலை வாய்ப்பு தேடுவது எப்படி?

    முதல் வழி,மிகவும் எளிதானது.உங்கள் நண்பர்களிடம் கேளுங்கள்.ஆம் நீங்கள் வேலை தேடிக்கொண்டிருப்பதை உங்கள் பேஸ்புக் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள். இதில் தவறேதும் இல்லை. உங்கள் தகுதியையும் வேலைக்கான எதிர்பார்ப்பையும் தெரிவித்தீர்கள் என்றால் பொருத்தமான வேலை வாய்ப்பை நண்பர்கள் பரிந்துரைக்கலாம்.த‌ங்களுக்கு தெரியாவிட்டாலும் தங்கள் நண்பர்கள் மூலம் கேட்டு சொல்லலாம்.பேஸ்புக்கின் தனிச்சிறப்பே இந்த சங்கிலித்தொடர் தானே. இதை உங்கள் தேலைவாய்ப்பு தேடலுக்கும் பயன்படுத்தி கொள்ளலாம்.

    ஆனால் ஒன்று பேஸ்புக் மூலம் வேலை தேடுவதாக இருந்தால் அதற்கு முன்பாக நீங்கள் ஒரு விஷய‌த்தை செய்தாக‌ வேண்டும்.அது உங்கள் பேஸ்புக் அறிமுக பக்கத்தை (புரபைல் பேஜ்)தூய்மையாக வைத்திருப்பது தான்.அதாவது  பேஸ்புக் பக்கம் உங்களை பற்றி சரியான அறிமுகத்தை தரும் வகையில் இருக்க வேண்டும்.இதன் பொருள் ஜாலியாக எடுத்துக்கொண்ட புகைப்ப்டங்கள் மற்றும் கேலியாகவும் கின்டலாகவும் தெரிவித்த கருத்துக்கள எல்லாம் நீக்குவது தான்.இவற்றை பகிர்ந்து கொள்ளமாலே இருப்பது இன்னும் நல்லது.

    காரணம்,பேஸ்புக் ப‌டங்களும் அதில் வெளியிடப்படும் நீங்கள் யார் என்பதை சொல்லாம்ல் சொல்லக்கூடியவை.பர்ஸ்ட் இம்பிர‌ஷன் ஈஸ் த பேஸ்ட் இம்பிரஷன் என்று சொல்வார்களே ,அத்தகைய எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் உங்கள் பேஸ்புக் பக்கம் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.நீங்கள் பார்த்த திரைப்படங்களை பற்றி பகிர்வதற்கு பதிலாக படித்த புத்தகம் அல்லது படிக்க விரும்பும் புத்தகம் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்த பொன்மொழி மற்றும் உங்களை கவர்ந்த முன்னோடிகள் பற்றி எழுதுங்கள்.நீங்கள் எப்படி இருக்க விரும்புகிரீர்கள் என்பது பற்றியும் ப்கிர்ந்து கொள்ளுங்கள்.

    இந்த பகிர்வுகள் உங்களை பற்றிய நல்லெண்ணத்தை ஏற்படுத்தும்.அது மட்டும் அல்ல இந்த நோக்கில் பேஸ்புக்க்கை பயன்ப‌டுத்தி பாருங்கள் உங்களுக்கே அது உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தரும்
    மேலும் பேஸ்புக்கில் இடம் பெற்றிருந்த புகைப்படங்கள் காரணமாக பலர் வம்பில் மாட்டிக்கொண்ட கதைகள் எல்லாம் இருக்கின்றன.எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.இவ்வளவு ஏன்,பேஸ்புக்கில் ஆட்சேபனைக்குறிய தகவல்கள் இருக்கின்றனவா என்று சரி பார்த்து சொல்வதற்காகவே தனியே இணைய சேவைகள் இருக்கின்றன தெரியுமா? ரெப்லர் (போன்ற தளங்கள் பேஸ்புக் பக்கத்தை அலசி ஆராய்ந்து அதில் நீக்கப்பட வேண்டிய பதிவுகள் மற்றும் கருத்துக்களை அடையாளம் காட்டுகின்றன.எனவே ,பேஸ்புக்கில் உங்களை பற்றிய எந்த வகையான க‌ருத்துக்கள் இடம் பெறுகின்றன என்பதில் கவனமாக‌ இருங்கள்.அவை தான் நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் லட்சிய வேலைக்கான வழியாக அமையலாம்.

    உங்களைப்பற்றிய சில தகவல்களை உடன‌டியாக அப்டேட் செய்வதும் பயனுள்ளதாக இருக்கும்.உதாரணத்திற்கு நீங்கள் பகுதிநேர வேலை பார்ப்பவராக‌வோ அல்லது பிரிலான்சராகவோ இருந்தால் உங்கள் சமீபத்திய செயல் பற்றிய தகவலை அடிக்கடி வெளியிடுங்கள்.செல்போனில் இருந்தே பேஸ்புக்கில் அப்டேட் செய்யும் வசதியை கொண்டு இப்படி உடனுக்குடன் தகவலகளை பகிர்ந்து கொண்டால் அது உங்கள் சுறுசுறுப்பை பறைசாற்றும்.நீங்கள் செய்த‌ வேலைக்கான இணைப்புகளையும் வழங்குங்கள்.

      ஆக உங்களை பற்றிய நல்ல தோற்றத்தை த‌ரும் வகையில் பேஸ்புக் பயன்பாட்டை மாற்றிக்கொண்டாயிற்று,இனி அடுத்த கட்டமாக வேலைக்கான வலையை விரிவாக்கலாம்.பேஸ்புக்கில் கிராப் சர்ச் எனும் தேடல் வசதி இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.இந்த தேடல் வசதி உங்கள் நண்பர்களின் பேஸ்புக் பக்கங்களை அலசி ஆராய்ந்து அவர்கள் பற்றிய தகவல்களை தெரிவிக்க்கூடியது. இதன் மூலம் நண்பர்கள் தொடர்பான விவாகாரங்களான தகவல்களை கூட கண்டுபிடிக்க முடியும்.அவை நம‌க்கு தேவையில்லை.ஆனால் இந்த தேடல் மூலம் உங்கள் நண்பர்களுக்கு உள்ள தொடர்புகளையும் காணலாம்.இதன் வாயிலாக உங்கள் நண்பர்களில் யார் நீங்கள் வேலை தேடிக்கொண்டிருக்கும் துறையில் தொடர்புகளை பெற்றிருக்கின்றனர் என தெரிந்து கொண்டு அவர்கள் உதவியை நாடலாம்.

    அதே போல பேஸ்புக்கில் உள்ள மார்க்கெட் பிலேஸ் வசதியையும் நிறுவங்களில் உள்ள வேலை வாய்ப்பு தகவல்களை தெரிந்து கொள்ள அணுகலாம்.இந்த வசதி வர்த்தக நோக்கிலானது என்றாலும் இதை வேலைபாய்ப்பு நோக்கிலும் ப‌யன்படுத்த முடியும்.
    பேஸ்புக்கில் இருக்கும் சோஷியல் ஜாப்ஸ் செயலியையும் முயன்று பார்கலாம்.ஆனால் இது பெரும்பாலும அமெரிக்கா சார்ந்ததாக இருக்கலாம்.

    இறுதியாக ,வேலை வாய்ப்பை பெற்றுத்தரக்கூடிய வகையில் சமூக உரையாடலில் ஈடுபடுங்கள். நீங்கள் வேலை தேடிக்கொண்டிருப்பதை குறிப்பால் உணர்த்தும் அப்டேட்களை வெளியிடலாம்.உங்கள் எதிர்பார்ப்புகளை பகிர்ந்து கொள்ளலாம்.உங்கள் திறமை மற்றும் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளலாம்.நண்பர்க‌ளுடன் நீங்கள் உரையாடும் விதம் உங்களுக்கு வேலை வாய்ப்புக்கு உதவும் புதிய தகவல்களையும் தொடர்புகளை பெற்றுத்தரலாம்.

    எல்லாவற்றுக்கும் மேல் இப்போது நிறுவங்கள் வேலை வாய்ப்புக்கு தகுதியான‌வர்கள் பற்றிய விவர்ங்களை திரட்ட இணையத்தை பயன்படுத்துகின்றன.பல நிறுவன‌ங்கள் பேஸ்புக் பக்கங்களிலும் வலைவீசி தகுதாயானவர்களை தேடுகின்றன. இந்தெ தேடலின் போது உங்கள் திறமையும் அடையாளம் காணப்படும் வாய்ப்பு இருக்கிறது.ஆல் த பெஸ்ட்.

    1 comments:

    1. மிக உபயோகமான தகவலை தந்தீர்கள் ஐயா.சேவைக்கு நன்றி.

      ReplyDelete