Friday, 11 October 2013

Tagged Under:

சர்வதேச பெண் குழந்தைகள் தினம – அக்டோபர் 11!

By: Unknown On: 10:33
  • Share The Gag

  • இப்போதைய நவீன உலகிலும் பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படும அநீதியைக் கண்டித்தும். பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும் அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும் 2011 டிச., 19ம் தேதி ஐ.நா, சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி அக்., 11ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. “பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல்” என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக்கருத்து.



    11 - international baby child day

     


    தற்போது பிறந்த பெண் குழந்தைகள் தொடங்கி 80 வயது வரை உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கு இப்போது மீடியாக்களில் வரும் செய்திகளே ஆதாரம்.பெண் குழந்தைகளின் வளர்ப்பில் தாயின் அன்பும், அரவனைப்பும் கட்டாயமாக தேவைப்படுகிறது. பெண் குழந்தைகளின் வளர்ப்பில் தாய்மார்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.


    வீட்டை விட்டு வெளியே செல்கிற பெண் குழந்தைகள் யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும். எத்தகைய பாதுகாப்பான இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்பதை கட்டாயம் கற்றுத்தர வேண்டும்.இந்தக் காலத்தில் ஆணும், பெண்ணும் வேலைக்கு சென்றால் தான் குடும்பத்தை நிர்வகிக்க முடியும் என்ற நிலை வந்து விட்டது. வேலைக்கு போகிறோம், சாம்பாத்திக்கிறோம், என்று சொல்லிக்கொண்டு பெண் குழந்தைகளை அலட்சியமாக விட்டு விடுதல் கூடாது. 


    அதே போன்று வீட்டில் இருக்கும் பெண்கள் எப்போதும் தங்கள் வீட்டு பணிகளை செய்வதில் நேரத்தை செலவிடாமல், பெண் குழந்தைகளின் கவனிப்பில் அக்கறை செலுத்த வேண்டும்.குழந்தைகள் பள்ளிக்கும், டியூஷனுக்கு செல்லும் போது மற்றவர்களின் துணையை நாடுவது ஆபத்தை விளைவிக்கும். முடிந்தவரையில் பெண் குழந்தைகளை தாய்மார்கள் அழைத்துச் சென்று வருவது பாதுகாப்பாகும்.


    பெண் குழந்தைகளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் தாய்மார்கள் கவனிக்க வேண்டும். அதற்கென்று எதற்கெடுத்தாலும் கண்டிப்பு கூடாது. இதனால் தேவையற்ற மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டு, எல்லா விஷயங்களையும் மறைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். பெண் குழந்தைகளை தன்னுடைய மகளாக நினைக்காமல் தோழியாக கருதி, அனைத்து விஷயங்களையும் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.


    இவ்வாறு ஒவ்வொரு தாய்மார்களும் பெண் குழந்தையை பாதுகாத்து, அரவணைத்து செயல்பட்டால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

    0 comments:

    Post a Comment