திரு.கே.ஜெகதீஸ்வரரெட்டி அவர்கள் நல்லாசியுடன், நியூ எம்பயர் செல்லுலாய்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக லஷ்மிகாந்த தயாரிக்கும் படம் ராவண தேசம். |
இந்த படத்தில் கதாநாயகனாக நடித்து, எழுதி இயக்குபவர் அஜெய். படம் பற்றி இயக்குனரும் நடிகருமான அஜெய் நூத்தகி கூறுகையில், இராணுவத்துக்கும் போராளிகளுக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து கொண்டிருக்கும் போது தங்களை காத்துக் கொள்ள வேண்டி நடக்கும் போராட்டக்களமே கதை கரு. கடல் வழியாக தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள படகில் தப்பிக்கும் ஒரு கும்பலின் உணர்ச்சி மிகு போராட்டம் தான் ராவண தேசம். கடல் மீது நடந்த சம்பவங்களின் தொகுப்பான “லைப் ஆப் பை” எப்படி ஒரு உணர்வு பூர்வமான பாதிப்பை ஏற்படுத்தியதோ அதற்கு நிகரான பாதிப்பை உணர்வில் பதிக்கக்கூடிய படைப்பாக ராவண தேசம் இருக்கும். காதல், எமோஷன்ஸ், நகைச்சுவை, ஆக்ஷன், பொழுதுபோக்கு என எல்லா அம்சங்களும் இதில் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். தொழில்நுட்ப கலைஞர்கள் ஒளிப்பதிவு - வி.கே.ராம்ராஜ். இசை - ஆர்.சிவன். எடிட்டிங் - கார்த்திகா சீனிவாஸ். கலை - பி.எஸ்.வர்மன். நடனம் - ஜெனிபர். பாடல்கள் - சுரேஷ்ஜித்தன், ஷண்முகவேல். ஸ்பெஷல் சவுண்ட் - சீனிவாசன் DARK VFX. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - அஜெய் நூத்தகி. தயாரிப்பு - லஷ்மிகாந்த். |
Friday, 11 October 2013
Tagged Under: சினிமா விமர்சனம்..!
“லைப் ஆப் பை” - உணர்வை ஏற்படுத்துமாம் “ராவண தேசம்”!
By:
Unknown
On: 11:29
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment