Tuesday, 15 October 2013

Tagged Under:

கவுதம் மீது சூர்யாவுக்கு என்ன கோபம்? பகீர் தகவல்!

By: Unknown On: 08:54
  • Share The Gag
  • கவுதம் மேனன் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் சூர்யா. சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்கள் ஒரு படத்தில் நடிக்க முடியாமல்போனால் அல்லது நடிக்க விரும்பாவிட்டால் பேசாமல் அதிலிருந்து விலகிவிடுவார்கள். கவுதம் இயக்க இருந்த படங்களே அதற்கு உதாரணம் கூறலாம். கவுதம் படத்தில் அஜீத் நடிக்க இருந்தார். ஆனால் அந்த முடிவை அஜீத் மாற்றி, சரணுக்கு வாய்ப்பு தந்தார். யோவான் அத்தியாயம் ஒன்று என்ற படத்தை கவுதம் இயக்க, விஜய் நடிக்க இருந்தார்.




    அந்த படமும் வேண்டாம் என விஜய் ஒதுங்கிவிட்டார். இதுபோல் பல எடுத்துக்காட்டுகள் உண்டு. ஆனால் இப்போது நடந்தது இண்டஸ்ட்ரிக்கே ஆச்சரியம் தருகிறது. திடீரென நேற்று முன்தினம் இரவு ஒரு அறிக்கையை வெளியிட்டார் சூர்யா. அதில், கவுதமின் திசை வேறு. எனது திசை வேறு. அவரது துருவ நட்சத்திரம் படத்தில் நான் நடிக்கவில்லை. கதையை உருவாக்காமல் 6 மாதங்கள் என்னை காக்க வைத்துவிட்டார் என கோபமாக கூறியிருக்கிறார்.


    கவுதமின் துருவ நட்சத்திரம் படத்தில் சூர்யா நடிக்கப்போவதில்லை என்பது எப்போதோ முடிவாகிவிட்டது. அதை சூர்யாவே சூசகமாகவும் தெரிவித்திருந்தார். அதனால்தான் லிங்குசாமி படத்தில் நடித்தபடியே நலன் குமாரசாமி இயக்கும் படத்திலும் நடிக்க அவர் திட்டமிட்டார். ஆனால் இப்போது திடீரென அறிக்கை மூலம் கவுதம் படத்திலிருந்து விலகியதை அவர் சொல்ல என்ன காரணம் என கோடம்பாக்கத்தில் விசாரித்தபோது, அதிர்ச்சி தகவல் கிடைத்தது.


    நீதானே என் பொன்வசந்தம் படத்தின் படுதோல்விக்கு பிறகு கவுதமுக்கு அடுத்த படம் இயக்க பைனான்ஸ் சிக்கல் ஏற்பட்டது. அதை சரிகட்ட ஒரே வழி சூர்யாதான் என முடிவு செய்தார். சூர்யா டாப் ஹீரோ. அவரை வைத்து படம் எடுக்க தொடங்கினால், பைனான்சியர்கள் தானாகவே கியூவில் நிற்பார்கள் என்பது கவுதமுக்கு தெரியும். நட்பின் காரணமாக சூர்யாவின் கால்ஷீட்டையும் எளிதில் வாங்கிவிடலாம் என முடிவு செய்தார்.


    சூர்யாவும் கவுதமுக்கு உதவ முன்வந்தார். ஆனால் கவுதம் சொன்ன கதை பிடிக்காமல் சூர்யா ஒதுங்க ஆரம்பித்தார். ஆனாலும் கவுதம், சூர்யா படத்தை இயக்கப்போவதாக அடிக்கடி டுவிட்டரில் குறிப்பிட்டு வந்தார். பைனான்ஸ் பிடிப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டார். கதையே பிடிக்காமல் நான் ஒதுங்கியபிறகு என் பெயரில் பைனான்ஸ் பிடிப்பதா என கடும் கோபமாகிவிட்டாராம் சூர்யா. இந்த கோபமே அவரது திடீர் அறிக்கைக்கு காரணம் என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.

    0 comments:

    Post a Comment