Tuesday, 15 October 2013

Tagged Under:

இந்த வருடமும் சென்னை சங்கமம் நடக்கும்! – ஜெயலலிதா ஆணை!

By: Unknown On: 21:35
  • Share The Gag
  • சென்னை நகரில் ஆண்டுதோறும் நடத்தப்படும் மிகப்பெரிய திறந்தவெளி தமிழ் பண்பாடு மற்றும் கலைநிகழ்ச்சி சென்னை சங்கமமாகும்.இதனை தமிழ் மையம் மற்றும் தமிழக அரசின் பண்பாடு மற்றும் சுற்றுலாத் துறை பழம்பெரும் நாட்டுக் கலைகளை வளர்த்தெடுக்கவும் கலைஞர்களுக்கு உற்சாகமூட்டவும் நடத்துகின்றன. தமிழரின் அறுவடைத் திருவிழா மற்றும் புத்தாண்டான பொங்கல் திருவிழாவினை ஒட்டி ஓரிரு வார காலத்திற்கு இது நடத்தப்படுகிறது.


    இதன் அமைப்பாளர்களின் கூற்றுப்படி இதுவே இந்தியாவில் நிகழும் நீண்ட மற்றும் பெரிய திறந்தவெளி கலைவிழாவாகும்.இந்நிலையில் அரசுத்துறைகள் மற்றும் தனியார் அமைப்புக்கள் இணைந்து தமிழகம் முழுவதும் புதிய கலைநிகழ்ச்சிகளை நடத்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்..தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகள் அழிந்து விடா வண்ணம், இளைஞர் சமுதாயத்திற்கு கொண்டு சேர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும அவர் அறிவித்துள்ளார்.



    15 - chennai sangam.MINI


    இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,”கடந்த 1991ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட கலை பண்பாட்டுத் துறை சார்பாகவும்,பிற அரசுத்துறைகள் மற்றும் தனியார் அமைப்புக்கள் சார்பாகவும்,தமிழகம் முழுவதும் நடத்தப்படும் அந்த கலை நிகழ்ச்சிகளுக்காக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு” செய்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    அதன் மூலம் அயல் நாடுகளுக்கு இடையிலான கலை பறிமாற்ற திட்டத்தின்கீழ், ஆண்டுதோறும் ஒன்று அல்லது இரண்டு கலை நிகழ்ச்சிகளும், மாநிலங்களுக்கு இடையிலான கலை பறிமாற்ற திட்டத்தின்கீழ் ஐந்து அல்லது ஆறு கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுமெனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.இதன்மூலம் தமிழகத்தின் தொன்மை வாய்ந்த கலை மற்றும் பண்பாட்டுப் பாரம்பரியம் உலகறியச் செய்யப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


    இத்தனைக்கும் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழியின் முயற்சியின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்ட சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சியை புது வடிவில் நடத்திக் காட்டவே இது போன்ற கலைநிகழ்ச்சிகளை அம்மையார்அரசே நடத்தவிருப்பதாக கூறப்படுகிறது.ஆக -கனிமொழியின் சென்னை சங்கமத்துக்கு – ஜெயலலிதா செக் வழங்கினார் – இந்த வருடமும் சென்னை சங்கமம் நடக்க்கும்.

    0 comments:

    Post a Comment