Monday, 18 November 2013

Tagged Under: ,

கார்த்தியின் ‘பிரியாணி’ டிசம்பர் 20-ந் தேதி ரிலீஸ்!

By: Unknown On: 09:33
  • Share The Gag


  • பொங்கல் பண்டிகைக்கு ரஜினியின் ‘கோச்சடையான்’, கமலின் ‘விஸ்வரூபம் 2’, அஜீத்தின் ‘வீரம்’, விஜய்யின் ‘ஜில்லா’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ள நிலையில், வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘பிரியாணி’ படத்தையும் பொங்கலுக்கு களமிறக்க திட்டமிட்டிருந்தனர்.

    ஆனால், பெரிய ஜாம்பவான்களின் படங்கள் அன்றைய தினம் வெளியாகவுள்ளதால், அவர்களுடன் போட்டி போட முடியாது என நினைத்த இப்படக்குழு படத்தை டிசம்பர்-20ந் தேதி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. அரையாண்டு விடுமுறையை மனதில் வைத்து இந்த படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    ‘பிரியாணி’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஹன்சிகா மொத்வானி நடித்துள்ளார். பிரேம்ஜி, ராம்கி உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. இந்நிலையில், படத்தின் மீதும் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

    0 comments:

    Post a Comment